Saturday, August 10, 2019

இந்தியா! பாகிஸ்தான்! சீனா! புதிய சவால்கள்! #3

இந்தப் பக்கங்களில் இந்தியா பாகிஸ்தான் சீனா! புதிய சவால்கள்! எனத் தலைப்பிட்டு ஐந்து மாதங்களுக்கு முன் இரண்டு பதிவுகளாக எழுதியதற்குப் பிறகு, மாற்றமுடியாத சில நிகழ்வுகள் இந்திய அரசியலில் சென்ற ஆகஸ்ட் 5.6, தேதிகளில் நடந்திருக்கிறது. 2020 இல் தேர்தலைச் சந்திக்கவிருக்கிற அமெரிக்க அதிபர் டொனால்ட்  ட்ரம்ப், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற சென்ற ஜனவரியில் இருந்தே தாலிபான்களோடு பேச்சு நடத்தி வருவதைப் பற்றியும் கூட  இங்கே எழுதியதையும் சேர்த்துப் பார்த்தால், காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு எடுத்திருக்கும் முடிவு இந்தியா, பாகிஸ்தான், சீனா மூன்று நாடுகளுக்கிடையே பல புதிய சவால்களைத் தொடங்கி வைத்திருக்கிறது என்பது புரியும்! ஆக இது ஒரு ஆரம்பம் மட்டும் தான்! 



ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கிற ஆர்டிகிள் 370 abrogate செய்யப்பட்டிருப்பதும், இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்கப்பட்டு அது  நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் 2/3 மெஜாரிட்டியில் சட்டம் ஆகவும் ஜனாதிபதி ஒப்புதலைப் பெற்றிருப்பதும் வெறும் உள்நாட்டு அரசியல் ஸ்டன்ட் தானா? நிச்சயமாக இல்லை. ஒரு விதத்தில் இந்த முடிவை எடுப்பதற்கு டொனால்ட் ட்ரம்ப்பும் காரணமாக அல்லது தூண்டுகோலாய் இருந்திருக்கிறார்!


இது வெறுமனே காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் சன்னி முஸ்லிம்களைப் பற்றியது மட்டுமல்ல. ஜம்மு காஷ்மீர் என்று சொல்லும் போதே வேறென்னவெல்லாம் சேர்ந்திருக்கிறது என்று கொஞ்சம் புரிந்துகொள்வதற்கு உதவியாக The Print தளத்தில் சேகர் குப்தா இந்த 28 நிமிட வீடியோவில், இந்தியா சீனா பாகிஸ்தான் என்று 3 அணு ஆயுத நாடுகளுக்கிடையில் இருக்கும் எல்லை பிரச்சினைகள், எனது உனது என்கிற பஞ்சாயத்துக்கள் இவைகளைச் சுருக்கமாக சொல்கிறார். மேலே உள்ள வரைபடத்தைப் பார்த்துக் கொண்டே அவர் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்! பிரிட்டிஷ் குள்ளநரிகள் விதைத்துவிட்டுப்போன அரைகுறையான பொய்கள் எப்படி இன்றைக்கு இவ்வளவு பெரிய பிரச்சினை ஆனது என்பதை ஒரே நடையில் புரிந்துகொண்டுவிடமுடியாது என்பதால் சிறிது சிறிதாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம்!


In fact, Trump’s looming Faustian bargain with the Taliban was an important factor behind India’s change of the constitutional status of Jammu and Kashmir (J&K). A resurgent Pakistan-Taliban duo controlling Afghanistan would spell greater trouble for J&K, including through increased cross-border entry of armed jihadists என்று தன்னுடைய அலசலை ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் நேற்று முன்தினம் பிரம்ம செலானி எழுதியிருக்கிற ஒரு கட்டுரை, இது விஷயத்தில் இந்தியா சந்திக்க வேண்டிய சில சவால்கள் என்னென்ன என்பதை ஒரு கோடி காட்டுகிறது. 

J&K’s reorganization effectively compartmentalizes India’s territorial disputes with Pakistan and China centred in that region. China’s protestation that India’s inclusion of Chinese-held Ladakhi areas in the new Ladakh union territory “hurts Chinese sovereignty” underscores that there will be no let up in Chinese incursions. In recent years, China — which occupies the Switzerland-size Aksai Chin Plateau and lays claim to several other Ladakh areas — has stepped up its military forays and incursions into Ladakh’s Demchok, Chumar, Pangong Tso, Spanggur Gap and Trig Heights. சீனா உடனடியாக ஒரு மோதலில் இறங்குமா அல்லது வெற்று உதார்களோடு நிறுத்திக் கொள்ளுமா என்பது சீரியசாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயம். இப்போது லடாக் விஷயத்தில் ஒரு சம்பிரதாயமான அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கும் சீனா வேறொன்றில் ஒரு எச்சரிக்கையாகச் சொல்லியிருக்கிறது.


India’s ambassador in Beijing was called to the Chinese foreign ministry on July 10 to hear China’s concerns about the US campaign to keep Huawei out of 5G mobile infrastructure worldwide என்று சீனா தனது வர்த்தக நலன்களை மட்டுமே முன்னிறுத்தியிருப்பதில் உங்களால் என்ன புரிந்து கொள்ள முடிகிறது?

மீண்டும் சந்திப்போம்.
   

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை