Saturday, February 9, 2019

ஆப்கானிஸ்தான்! மீண்டும் ஒரு குழப்பம்!

By promising a terrorist militia a total American military pullout within 18 months and a pathway to power in Kabul, the US, in essence, is negotiating the terms of its surrender.(AFP) என்கிறது படத்தின் கீழே இருக்கும் தலைப்பு 

This year is Afghanistan’s 40th year in a row as an active war zone. Betrayal, violence and surrender have defined Afghanistan’s history for long, especially as the playground for outside powers. The US-Taliban “agreement in principle” fits with that narrative. By promising a terrorist militia a total American military pullout within 18 months and a pathway to power in Kabul, the US, in essence, is negotiating the terms of its surrender. இப்படி வெளிநாட்டு சக்திகளால் ஆப்கானிஸ்தான் அலைக்கழிக்கப்படுகிற அவலக்கதையை அலச ஆரம்பிக்கிறார் பிரம்ம செலானி. அமெரிக்கா இப்படிப் புதைகுழிக்குள் சிக்கிக் கொள்வது புதிதல்ல தான்! ஆனால் ஆப்கானிஸ்தானில் சிக்கிக் கொண்ட புதைகுழி கொஞ்சம் நீண்டகாலம் நீடித்தது. பதினேழு ஆண்டுகள்! 

எப்படியாவது உருவிக் கொண்டு வெளியேறினால் போதுமென்று அமெரிக்கா அவசரக்கோலத்தில் அள்ளித் தெளிக்கிற மாதிரி, ஆப்கானிஸ்தான் அரசிடமோ அல்லது பாதுகாப்பு விவகாரங்களில் மேஜர் பார்ட்னர் என்று சொல்கிற இந்திய அரசிடமோ கலந்தாலோசிக்காமல், தாலிபான்களிடம் ஆப்கானிஸ்தானத் திருடர்களிடமே  தூக்கிக் கொடுத்துவிட்ட மாதிரித்தான் நடந்து கொண்டிருக்கிறது! 

யார் இந்தத் தாலிபான்கள்? தாலிபான்கள் பஷ்ட்டூன்களையோ, ஆப்கானிஸ்தானில் உள்ள மெஜாரிடி மக்களையோ பிரதிநிதித்துவப் படுத்துகிறவர்களோ இல்லை! இவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானிகள்! பாகிஸ்தானிய ராணுவத்தின் ரௌடி அமைப்பான ISIயால் பயிற்சியளிக்கப்பட்டவர்கள்! இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் எல்லைதாண்டிய பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்தப்படுகிற Lashkar-e-Taiba, Jaish-e-Mohammed போன்ற இன்னொரு அமைப்புதான்! ஆக, அமெரிக்காவின் இந்த சமாதானம், திருடர்கள் காலிலேயே விழுந்து, இதோ முழுசாக எடுத்துக்கொள் என்கிற மாதிரித் தானோ? 

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தூண்டி, பாகிஸ்தான் அமெரிக்காவிடமிருந்து 33 பில்லியன் டாலர்களை அனுபவித்து, அப்புறமும் ஒரு ஜாக்பாட் அடித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் மீண்டுவர இதுவரை இந்தியா செய்திருக்கிற 3 பில்லியன் டாலர்கள் உதவி கூட வியர்த்தம் தானோ?

பாதுகாப்பிலும் இந்தியா கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.     

             

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை