அமெரிக்காவின் புது அதிபர் ஜோ பைடன் வாயைத் திறந்தால் ஏழரையைக் கூட்டிக் கொள்வது என்று கொள்கை முடிவோடு இருப்பார் போல. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை ஒரு கொலைகாரர், அதற்கான விலையை அவர் கொடுத்தே ஆகவேண்டும் என்று ஒரு பேட்டியில் சொன்னது பெரும் சர்ச்சையை மட்டுமல்ல, ராஜீய உறவுகளில் சிக்கலையும் ஏற்படுத்தியிருக்கிறது.
பாம்பின் கால் பாம்பறியும் என்று புடின் பதிலடி கொடுத்ததோடு நிறுத்திக் கொள்ளவில்லை, அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதரையும் திருப்பி அழைத்திருக்கிறார்.
Russia called its US ambassador back to Moscow for consultations on Wednesday after Joe Biden described Vladimir Putin as a "killer" who would "pay a price" for election meddling, prompting the first major diplomatic crisis for the new American president. என்கிறது AFP.. முந்தைய பனிப்போர் நாட்களில் சோவியத் யூனியனை பிரதான எதிரியாகக் கருதிய பழைய நினைப்பிலேயே ஜோ பைடன் நிர்வாகம், ரஷ்யாவின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்திருப்பது மோசமான ஒரு துவக்கம் என்றால் அதிபரின் பொறுப்பற்ற பேச்சு சிக்கலை இன்னும் பெரிதாக்கியிருக்கிறது.QUAD அமைப்பை முன்னெடுத்துச் செல்கிற மாதிரி கடந்த வாரம் ஜோ பைடன் ஒரு ஷோ காட்டியிருந்தாலும், சீனாவை எதிர்கொள்வதில் ஒரு இரண்டும்கெட்டான் நிலையைக் கடைப்பிடிக்கிற தோற்றமும் இருக்கிறது. இன்றைக்கு அலாஸ்காவில் சீனர்களோடு பேச்சு வார்த்தையை நடத்தவிருக்கிறார்கள். முந்தைய பதிவில் வட கொரியா தனது எரிச்சலைப் பகிரங்கமாக வெளிப் படுத்தியிருந்ததையும், சீனர்களோடு பேசுவார்களாம்!
“Beijing has an interest, a clear self-interest in helping to pursue denuclearisation of [North Korea] because it is a source of instability. It is a source of danger and obviously a threat to us and our partners,” Blinken told reporters in Seoul after he and the US defence secretary, Lloyd Austin, had met their South Korean counterparts.As a permanent member of the UN security council, China was also duty-bound to fully enforce sanctions imposed on North Korea in response to its nuclear weapon and ballistic missile programmes, Blinken said.என்கிறது இந்தச் செய்தி.
வடகொரியாவை அடக்கி வைக்கும்படி சீனர்களிடம் மன்றாடுவதிலிருந்தே ஜோ பைடன் நிர்வாகத்தின் china policy ஒரு தெளிவில்லாமல் தள்ளாடுவதும் வெளிப்பட்டிருக்கிறது. நேசநாடுகளின் நம்பிக்கையை மீட்டெடுப்பதில் இதுவரை உருப்படியான செயல்திட்டம் எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை. மிகவும் பலவீனமான அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருக்கப்போகிறாரா என்பதைக் காலம்தான் தெளிவு படுத்தவேண்டும்.
மீண்டும் சந்திப்போம்.
ஹஹ்ஹாஹா.. காலம் தான் நம் தோழன் ஆச்சே!!
ReplyDelete