Tuesday, June 22, 2021

முதலில் சீனா! இப்போது ஈரான்! அடுத்தடுத்து கேலிக்குள்ளாகும் American Tianxia!

உலகின் நட்டநடுநாயகம் என்று பொருள்படும் Tianxia என்கிற சொல்லை வைத்து சீனாவின் உலகளாவிய ஆதிக்கக் கனவுகளை இந்தப்பக்கங்களில் பலமுறை பார்த்திருக்கிறோம். 1950 முதல் தொடங்கும் நூற்றாண்டு அமெரிக்காவுடையதாக இருந்தது. 2050 முதல் தொடங்கும்  நூற்றாண்டு சீனாவுடையதாக இருக்கும் என்ற கனவும் கருத்தும் 2013 இல் உருவாக்கப்பட்டது. அதேநேரம் சீன அதிபர் ஷி ஜின்பிங் அந்தக்கனவுக்குச் செயல்வடிவம் கொடுக்கத் தொடங்கியதில் Belt and Road Initiative என்கிற ஒரே பெல்ட் ஒரே ரோடு (OBOR) வேகம் எடுத்து இன்றைக்கு அங்கங்கே முட்டுச்சந்தில் போய் நிற்கிறது. அமெரிக்கா உடனான பொருளாதார, ராணுவப் போட்டியில் முந்த ஒரு காலக்கெடு 2049 என்பதாக 2019 இல் தீர்மானிக்கப்பட்டதையும் இங்கே பார்த்திருக்கிறோம்.  


ஷி ஜின்பிங் சற்றே அவசரப்பட்டு விட்டாரோ? கனவு நனவாகும் கால அளவைக்குறைத்து வூஹான் வைரசைப் பரப்பியதில் சீனர்களுடைய ஆதிக்கக்கனவுகளும் தடை பட்டு நிற்கின்றன. அதேநேரம் அமெரிக்காவும் முன்னை விட இன்னும் அதிகமாகப் பலவீனப்பட்டு வருகிற மாதிரி இருக்கிறதே! மேலே 4 நிமிட வீடியோ, ஈரானின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற இப்ராஹிம் ரைசி அமெரிக்காவுக்குப் பெரும் தலைவலியாக உருவெடுக்கிறார். 60 வயதாகும் ரைசி தலைமை நீதிபதியாக இருந்த 1988 காலங்களில் 5000 நபர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படக் காரணம் என்று அம்னெஸ்டி இன்டர்நெஷனல் புழுங்குகிறது. அது மட்டுமா? அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்திக்க விருப்பமில்லை, ஈரானின் ஏவுகணைத்திட்டத்தைக் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்போவதுமில்லை என்றும் அதிரடியாக அறிவித்திருக்கிறார். அமெரிக்கா ஈரான் மீது விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளை நீக்கியே ஆகவேண்டும் எனவும் முழங்கியிருக்கிறார். 


வீடியோ 2 நிமிடத்துக்கும் குறைவுதான்! காட்டம் அதிகம்! ஈரானின் ஏவுகணைத்திட்டம் குறித்தோ, சவூதி அரேபியா போன்ற பகைமை நாடுகளுக்கெதிராக  பிராந்தியத்தில் ஹிஸ்பொல்லா போன்ற கிளர்ச்சி இயக்கங்களுக்கு ஆயுதம் மற்றும் பணவசதி அளிப்பது குறித்தோ நேற்றைக்கு நிருபர்களிடம் எதுவுமே பேச மறுத்துவிட்டார். இத்தனைக்கும் அதிபராக வருகிற ஆகஸ்ட் மாதத்தில்தான் பொறுப்பேற்றுக்கொள்ளப் போகிறார். அதற்கு முன்னதாகவே அமெரிக்காவுக்கு ஆப்பு, கடுப்பு அடிக்கிற வேலையில் இறங்கியாகி விட்டதென்றால், அமெரிக்கர்களுடைய பரிதாப நிலைமையைக் கொஞ்சம் கற்பனை செய்துதான் பாருங்களேன்!

ஆனால் ஈரானை அடக்குவதில் இஸ்ரேல் அதீத ஆர்வம் காட்டுகிறது. இப்ராஹிம் ரைசி நிருபர்களிடம் பேசிக் கொண்டிருந்த நேரத்திலேயே ஈரானின் அணுவுலை ஒன்றில் தீவிபத்தொன்று ஏற்பட்டிருக்கிறது. இது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்தான் என்று ஈரான் அநேகமாக அறிவிக்கவும் கூடும்.  


பிரிட்டனைத் தவிர வேறெந்த NATO கூட்டாளியும் பக்கபலமாக நிற்கத்தயாராக இல்லாத  அமெரிக்க சோகம் சீனாவின் லாபமாக மாறவில்லை என்பது சீனர்களுடைய சரிவர? கர்மாவா? வீடியோ 6 நிமிடம்தான்.

மீண்டும் சந்திப்போம்.      

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை