Monday, March 30, 2020

#சீனாவைரஸ் சீன அதிபரின் களிமண் கால்கள்!

ஒருபக்கம் உலகின் பலபகுதிகளிலும் சீனவைரஸ் தொற்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் சீனக் கம்யூனிஸ்ட்  கட்சிக்கும், சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கும் செல்வாக்கு மிகவும் சரிந்து போயிருப்பதாக ANI செய்தித்தளம் இன்று பிற்பகல் ஒரு விரிவான செய்திக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.
கட்டுரைக்கு வைத்திருக்கிற தலைப்பே Virus exposes Xi's feet of clay வடிவேலு காமெடியாக சொல்வதானால் கட்டடம் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்கு! ஆனால் தலைப்பு நேரடியாகச் சொல்வது மண் குதிர்!


  
இந்த 2 நிமிட வீடியோவில் சொல்கிற மாதிரி நாங்கள் வூஹான் வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு விட்டோம்! உலகத்தைக் காப்பாற்றவும் உதவி செய்யவும் தயாராக இருக்கிறோம் என்ற சவடால், பிரசாரம் எந்த அளவுக்கு உண்மை? எதற்கும் இந்த ட்வீட்டர் செய்தியைப் பார்த்துவிடுங்கள்! வூஹானில் வைரஸ் தொற்றால் இறந்தவர்களுடைய அஸ்தியைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட கூட்டம்.

Massive deliveries of urns in Wuhan have raised fresh skepticism of China’s coronavirus reporting.As families in the central Chinese city began picking up the cremated ashes of those who have died from the virus this week, photos began circulating on social media and local media outlets showing vast numbers of urns at Wuhan funeral homes.



China has reported 3,299 coronavirus-related deaths, with most taking place in Wuhan, the epicenter of the global pandemic. But one funeral home received two shipments of 5,000 urns over the course of two days, according to the Chinese media outlet Caixin.It’s not clear how many of the urns were filled.Workers at several funeral parlors declined to provide any details to Bloomberg as to how many urns were waiting to be collected, saying they either did not know or were not authorized to share the number. என்கிறது நியூயார்க் போஸ்ட் செய்தி.  ஆக, வைரஸ் தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கையை மட்டுமல்ல பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையையும் சீனா ஆரம்பத்திலிருந்தே குறைத்தே சொல்லிவருகிறது என்ற விஷயம் ஊர்ஜிதமாகியிருக்கிறது. ஆனால் இந்திய ஊடகங்களில் சிலநாட்களாகவே சீனா மீண்டு வந்த வெற்றிக்கதையைப் பற்றிய பிரசார தம்பட்டம் கொஞ்சம் கூடுதலாகவே அடிக்கப்பட்டு வருகிற வேளையில் ANI செய்திநிறுவனத்தின் இந்தச் செய்திக் கட்டுரை சீன அதிபரும் சீனக்கம்யூனிஸ்ட்  கட்சியும் மக்களிடையே பரவலாக செல்வாக்கிழந்து நிற்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறது. 

ஆஸ்திரேலியத்தலைநகர் கான்பெராவில் சீனா பாலிசி சென்டரின் இயக்குனரான ஆடம் நீ பிரச்சினையை இருவிதமாகப் புரிந்துகொள்ளலாம் என்கிறார். ஒன்று சீன அதிகாரிகளின் தவறான கையாளுதல். அடுத்தது பிரச்சினை பெரிதாகிக் கொண்டே போன காலத்தில் ஷி ஜின்பிங்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்மட்டத் தலைவர்களும் வெளியே வராமல் பாதுகாப்பாகப் பதுங்கிக் கொண்டது. இந்த இரண்டிலும் கம்யூனிஸ்ட் கட்சி, பாரமௌன்ட் லீடர் ஷி ஜின்பிங் இருதரப்புடைய இமேஜும் கணிசமாக அடிவாங்கியிருக்கிறது என்பது சாராம்சம். சீனாவுக்கு கடந்த ஒருவருடமாகவே பல்வேறு விஷயங்கள் பெரும் சவாலாக இருந்தன. பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவுடனான வர்த்தகப் போர், ஹாங்காங் போராட்டங்கள் வரிசையாக சமாளிக்க வேண்டியவைகளாக இருந்ததோடு வூஹான் வைரஸ் தொற்றும் சேர்ந்து கொண்டதில் அதுவரை கேள்வி கேட்க முடியாததாக இருந்த சீனாவின் அரசியல் தலைமை (ஒப்பாரும் மிக்காரும் இல்லாத paramount leader ஷி ஜின்பிங்) அத்தனை குளறுபடிகளுக்கும் பதில் சொல்லியாக வேண்டிய நிலைமை!

ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் எழுதப்படாத கோட்பாடுகளில் அடுத்தவர் மீது பழிசுமத்தி அதன் பின்னே ஒளிந்து கொள்வது, மிக முக்கியமானது! கோளாறுகளுக்குப் பதில் சொல்வதோ பொறுப்பேற்றுக் கொள்வதோ இல்லை! சித்தாந்தம் கோட்பாடு விமரிசனம் சுயவிமரிசனம் என்பதெல்லாம் ஏட்டளவோடு சரி! பிரசாரம் ஒன்றே இன்றைய கம்யூனிஸ்டுகளுக்கு முழுவேதம்! சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முந்தைய காலத்தில் மாசேதுங் ஒருவரே மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் இப்படி எல்லாமுமாக ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் தலைவராக இருந்தார். அவருக்குப் பின் ஷி ஜின்பிங் தான் அந்த இடத்தைப் பிடித்தார் என்றாலும் சாயம் சீக்கிரமாகவே வெளுத்துப் போய் விட்டது.

ANI கட்டுரையைலிங்கில் முழுமையாகப் படித்துப் பாருங்களேன்! சீனத்து உதார்கள் எப்படிப்பட்டவை என்பதைக் கொஞ்சமாவது புரிந்துகொள்ள வேண்டாமா?

மீண்டும் சந்திப்போம்.              

Wednesday, March 4, 2020

முடங்கிப்போன #CPEC பாகிஸ்தான் #பொருளாதாரம் - 01

இன்றைக்கு NDTV இன்னொரு தளத்தில் (Bloomberg) இருந்து இரவல் வாங்கிப்போட்டிருக்கிற ஒரு செய்தி சீனா பாகிஸ்தான் எகனாமிக் காரிடார் என்கிற CPEC முற்றிலுமாக முடங்கிப்போயிருக்கிற கதையைக் கொஞ்சம் விரிவாகவே சொல்லியிருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. பெல்ட் & ரோடு இனிஷியேடிவ் சுருக்கமாக BRI சீனாவின் OBOR ஆதிக்கக் கனவுகளின் ஒருபகுதியாக மிகுந்த ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப் பட்ட CPEC, இன்று களையிழந்து அப்படியே அந்தரத்தில் நிற்கிறதாம்!

2018 சீனத் தம்பட்டம் என்னவானது? 
   
ஒரு விரிவாக்கப்பட்ட ஆழ்கடல் துறைமுகம், விமான நிலையம், சீனாவின் மேற்குப்புற மாகாணக்கடைசி வரை இணைக்கிற தரமான சாலைகள், ரயில்வே பாதைகள்,தொழிற்சாலைகள், பைப்லைன்கள், மின் உற்பத்தி நிலையங்கள் என்று கனவென்னவோ மிகப் பெரியதாகத்தான் இருந்தது. 62 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு இது வரை 19 பில்லியன் டாலர்கள் வரை ஆகியிருக்கிறது என்பதில், பாகிஸ்தான் திரும்பிச் செலுத்தவேண்டிய தவணை, வட்டி எவ்வளவு என்கிற விவரம் அவ்வளவாக வெளியே வரவில்லை. கெஞ்சிக் கூத்தாடி சவூதி அரேபியாவிடமிருந்து கொஞ்சம், IMF இன் கடுமையான நிபந்தனைகளை ஏற்றபிறகு ஒரு 6 பில்லியன் டாலர் வாங்கி, அடுத்த தவணைக்கடனாக இன்னொரு 6 பில்லியன் டாலர் கடனுக்காகக் கையேந்திக் கொண்டு இருக்கிற பாகிஸ்தான் மீது சீனா நம்பிக்கை இழந்து விட்டதன் வெளிப்பாடா இது? CPEC ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்து ஏழாண்டுகளாகின்றன என்பதில்  எதனால் திட்டமிட்டபடி வேலைகள் மளமளவென்று நடக்காமல் அந்தரத்தில் தொங்கவிடப்பட்டிருக்கிறது.

திட்டத்தின் ஒரிஜினல் நோக்கப்படி, OBOR என்பது சீனாவின் புதிய பட்டுப்பாதை! சீனர்களுடைய கடலாதிக்கத்தை தங்குதடையில்லாமல் விரிவு படுத்துகிற கனவோடு ஆரம்பிக்கப்பட்டது தான்! தற்போதைய நாட்களில் குறுகிய மலாக்கா ஜலசந்தி வழியாகவே சீன வர்த்தகக் கப்பல்கள் பயணிக்கின்றன. இந்தக் கடல்பாதை, பல்வேறு தரப்புகளில் இருந்து மறிக்கப்படலாம் என்பதான சினேரியோவை மாற்றுவதோடு, தூரம் குறைவான அரேபியக்கடல் பிராந்தியம் சீன வணிகம் தங்குதடை இல்லாமல் நடப்பதற்கு தற்போதைக்கு பாகிஸ்தானில் இருக்கிற  க்வாடார் துறைமுகம் மிகவும் உதவியாக இருக்கும் என்பதோடு வர்த்தகத்தைப் பாதுகாக்கும் சாக்கில் இந்தியாவுக்கு மிக அருகே சீனக்கடற்படை உலாவலாம்! தேவைப்பட்டால் கடற்படை தளமாகவும் மாறலாம்! பொருளாதாரத்தில் போட்டியாக வளர்ந்துவரும் இந்திய நாட்டுக்கு  உபத்திரவமும் கொடுக்கலாம் என்பது அதன் கேந்திர முக்கியத்துவம்.


திட்டத்தில் ஒரு பழுதுமில்லை! ஆனால் பாகிஸ்தான் சீனாவுடன் அமைக்கவிருக்கும் க்வாடார் பகுதி முழுவதும் சர்ச்சைக்குரிய ஒரு பகுதி! 


பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரின் ஒருபகுதி வழியாக இந்த சாலை அமைக்கப்படுகிறது என்பது ஒருபக்கம். பலூச் இன மக்கள் வாழ்கிற பிராந்தியம். பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு எதிராகத் தொடர்ந்து போராடும் பலூச் மக்கள் பாகிஸ்தானிடமிருந்து விடுதலைவேண்டி வன்முறைகளில் இறங்கிவருவது சீனாவுக்குப் பெரும் தலைவலி! அந்த மக்களுக்கு மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள் அமைத்துத்தருகிறோம் என்று சீனா முயற்சித்தது கொஞ்சமும்  எடுபடவில்லை. 

அடுத்து வரும் பதிவுகளில் இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசலாம்.

மீண்டும் சந்திப்போம்.                               

Tuesday, March 3, 2020

தாலிபான்களோடு ஒப்பந்தம்! ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்புமா?

அதென்னவோ கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளில் அமெரிக்கா உலகத்தின் போலீஸ்காரனாக, ஒவ்வொரு புதைகுழியாகப்போய் சிக்கிக் கொள்வதும், அப்புறம் ஆளைவிட்டால் போதுமடா சாமி என்று எதிரிகளுடன்/ சாத்தானுடன் சமாதானம் செய்து கொண்டு, அதுவரை கூட்டாளிகளாக இருந்தவர்களை அம்போவென விட்டு விடுவதும் ஒரு தொடர்கதையாகவே ஆகிக் கொண்டு வருவது வரலாற்று சோகம்!

  
Start with the Taliban’s commitment to crack down on international terrorist organizations. Douglas London, a former CIA officer who was its head of counterterrorism in South and Southwest Asia, told Foreign Policy that the United States had little reason to trust the Taliban’s leadership would carry out its promises. There’s also reason to doubt Abdul Ghani Baradar, the mullah who signed the agreement on behalf of the Taliban (after having been released from a Pakistani prison in October 2018 after a push by the United States to get the talks going), is in a position to make commitments or grant concessions. “Doha-based representatives [Mohammad Abbas] Stanakzai and Baradar have little sway,” London said. அவர் சொன்ன மாதிரியே காந்தகார் மாகாணத்தின் தென்பகுதியில் இரு மாவட்டங்களில் உள்ளூர் போலீஸ் மீது தாக்குதலை தாலிபான் ஆரம்பித்து விட்டது. ஆப்கானிஸ்தான் ராணுவம், போலீஸ் என்று அமெரிக்கர்களோடு யார்யார் ஆதரவாக நின்றார்களோ அத்தனைபேர்களையும் தீர்த்துக் கட்டுவதில் தான் அவர்களுடைய முனைப்பு இருக்கும் என்பது தெரிந்த விஷயம் தான்! 

The partial truce between the US, the insurgents and Afghan forces lasted for the week running up to the signing of the US-Taliban accord in Doha on Saturday, and was extended over the weekend. “The reduction in violence... has ended now and our operations will continue as normal,” Taliban spokesman Zabihullah Mujahid told AFP.


ஆப்கானிஸ்தானில் பலத்த காவலில் இருக்கும் 5000 தாலிபான்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஒப்பந்தம் சொன்னாலும் அவர்களை விடுவிக்கப்போவதில்லை என்று ஆப்கானிஸ்தானின் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்திருக்கிறார்.

இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்கர்கள் என்ன நினைக்கிறார்கள்? இதே மாதிரித்தான் 1973 இல் வியட்நாம் புதைகுழியில் இருந்து விடுபட அமெரிக்கர்கள் வட வியட்நாமோடு ஒப்பந்தம் செய்து கொண்டதில், அமெரிக்கர்களுக்கு ஆதரவாய் நின்ற தெற்கு வியட்நாமைக் கைகழுவிய கதை இருந்தது என்று ஒரு கருத்து வலுவாக இருக்கிறது. இப்போது சமீபத்தில் கூட, சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் என்று அறிவித்ததில் அமெரிக்கர்களோடு தோளோடு தோள் நின்ற குர்துப் போராளிகள் கைகழுவப்பட்டார்கள். நல்லவேளையாக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் டொனால்ட் ட்ரம்ப் நடத்திய அமைதிப்பேச்சு வெறும்பேச்சாகவே முடிந்துபோனதில் தற்போதைக்கு தென்கொரியா தப்பித்தது என்று கூடச் சொல்லலாம்.  


 

The Print தளத்தில் சேகர் குப்தாவும், ஜோதி மல்கோத்ராவும், தாலிபான்களோடு பேசுவதில்லை என்று இந்தியா முடிவெடுத்ததால், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அரசு கோட்டை விட்டுவிட்டது என்ற மாதிரி எழுதுகிறார்கள். இந்த 27 நிமிட வீடியோவில் ஒரு முன்னாள் தூதர், ஒரு பத்திரிகை ஆசிரியர், மற்றும் ஒரு மேஜர் ஜெனெரல் (ஓய்வு) மூவரும் கொஞ்சம் விவரங்களைச் சொல்கிறார்கள்.

அமெரிக்கர்கள் விட்டால் போதுமென்று ஓடத்தயாராக இருக்கிறார்கள் என்பதுவரை சரி. அதனால் தாலிபான்களால் ரணகளமாகியிருக்கும் ஆப்கானிஸ்தான் அமைதியைச் சந்திக்கும் என்பதற்கு ஒரு உத்தரவாதமும் இல்லை. அதே சமயம் தாலிபான்கள் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுமில்லை. என்ன நடக்கப்போகிறது என்பதைக் கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இந்த விஷயத்தை இன்னும் விரிவாகத் தொடர்ந்து இங்கே பேசுவோம். தொடர்புடைய பதிவுகளாக தாலிபான், இந்தியா பாகிஸ்தான் சீனா என்ற குறியீட்டுச் சொற்களில் உள்ளவற்றைப் பார்க்கலாம். 

   

மீண்டும் சந்திப்போம்.             

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை