Monday, January 28, 2019

அணி சேராக் கொள்கை! ஆரம்பமான கதை

நேற்றைய நாட்களின் மிகப்பெரிய தம்பட்டமாக, வெற்று கோஷமாக இருந்த ஒரு இயக்கம் Non Aligned Movement அணிசேரா (நாடுகள்) இயக்கம் உருவான விதம், எப்படி அன்றைய பிரதமர் நேருவின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் மீது உருவானதே அன்றி, நாட்டின் நலன்களை முன்னிறுத்தி உருவாக்கப்படாததாக, வெளியுறவுக் கொள்கையின் ஒரு அம்சமாகவே இருந்த கதையைக் கொஞ்சம் பார்க்கலாமா?

விமல் சிங் ராத்தோர் என்ன சொல்கிறார் என்பது ஹிந்தியில் யூட்யூபில் கிடைத்தாலும், மொழி தெரியாத காரணத்தால் இங்கே பகிரவில்லை. 

ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் கூகிள் பிளஸ்சில் எழுதிய சிறு குறிப்பு இங்கே கொஞ்சம் உதவியாக  

இந்த #அணிசேராக்கொள்கை  அணிசேரா நாடுகள் உருவான விதமே கொஞ்சம் வேடிக்கையானது. யூகோஸ்லாவியா (தற்போது சிதறிவிட்டது) நாட்டின் செல்வாக்கு மிகுந்த தலைவராக இருந்தவர் #மார்ஷல்டிட்டோ   இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் ரஷ்யாவின் ஸ்டாலினோடு கருத்து வேறுபாடுகள் அதிகரித்த நிலையில் டிட்டோவைக் கொல்லவும் முயற்சிகள் நடந்தன. அப்போது டிட்டோ ஸ்டாலினுக்கு அனுப்பியதாகச் சொல்லப்படும் செய்தி மிகவும் பிரபலம்.

Stop sending people to kill me. We've already captured five of them, one of them with a bomb and another with a rifle. (...) If you don't stop sending killers, I'll send one to Moscow, and I won't have to send a second.

— Josip Broz Tito

கம்யூனிசத்தின் ஏகபோக உரிமையாளர்களாகத் தங்களை நினைத்துக் கொண்டு பிற சகோதர நாடுகளை ஆட்டுவித்த ரஷ்யாவின் போக்குக்கு எதிராக மார்ஷல் டிட்டோ கையில் எடுத்த ஆயுதம் தான் #அணிசேராக்கொள்கை  ஆரம்ப நாட்களில் ரஷ்யாவின் சோஷலிஸக் கொள்கைகளில் அபிமானம் கொண்டிருந்த நேரு ஸ்டாலின் மீது நம்பிக்கை இழந்திருந்த தருணம். சோஷலிசம் மீது மட்டும் கொஞ்சம் பிடிப்பு என்ற நிலையில் மார்ஷல் டிட்டோவுடன் சேர்ந்து கொண்டார் 

அமெரிக்கா ரஷ்யா என்று உலகம் இரண்டாகப் பிரிந்திருந்த சமயம், இவர்களில் எவரோடும் அணி சேர்வதில்லை என்று உருவானது தான் அணிசேரா நாடுகள் அமைப்பு. இந்திய அரசியலில் எப்படி மூன்றாவது அணி என்பது unstable elements இன் கலவை என்றிருக்கிறதோ, அதே போல சர்வதேச அரசியலில் அணிசேராதவை என்பது ஒரு வினோதமான கலவையாக, இரண்டு தரப்போடும் உறவா இல்லையா என்று குழம்பி, குழப்பிக் கொண்டிருந்த நாடுகளின் கூட்டமாக மட்டுமே இன்றைக்கு முக்கியமிழந்து போன ஒரு விஷயம்.

டிட்டோ ஸ்டாலின் இருவருக்கும் இடையிலான யார் பெரியவன் என்ற போட்டி ஆரம்பநாட்களில் டிட்டோவுக்குக் கொஞ்சம் சாதகமாக இருந்தது.

1961 இல் உருவான அணிசெராக் கொள்கையில் ஐந்து முக்கியமான தலைவர்களாக டிட்டோ, நேரு, எகிப்தின் நாசர், இந்தோனேஷியாவின் சுகர்னோ, கானா நாட்டின் என்க்ருமோ ஆகிய ஐவர் இருந்தனர்.
(மேலே படத்தில் இடது ஓரம் நேரு வலது ஓரம் மார்ஷல் டிட்டோ)  

நேருவுக்கு ஒரு விளம்பரமாக இருந்ததைத் தவிர இந்த #அணிசேராக்கொள்கை  இந்தியாவுக்கு எந்த விதத்திலும் உதவியாக இருந்ததில்லை 

#நேருபாரம்பரியம்  எவ்வளவு அபத்தமானது என்பதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த வரலாற்று நிகழ்விலிருந்தே நிறைய சொல்ல முடியும்.
இந்திய இடதுசாரிகளும் பத்திரிக்கையாளர்களும் எவ்வளவு லூசுத்தனமாக எழுதுகிறார்கள் என புரிந்து கொள்ள, போன அணிசேரா மாநாட்டுக்கு மோடி கலந்து கொள்ளவில்லையே என நீலிக்கண்ணீர் வடித்ததை பார்க்கவேண்டும்.

வெனிசுவேலாவிலே நடந்த மாநாட்டிலே கலந்து கொண்ட நாட்டு தலைவர்களின் எண்ணிக்கை 8 பேர் மட்டுமே. கடந்த முறை தெஹ்ரானிலே நடந்த மாநாட்டிலே கலந்து கொண்ட தலைவர்களின் எண்ணிக்கை 35. அணி சேரா அமைப்பிலே இருக்கும் நாடுகளின் எண்ணிக்கை 120.

உலக நாடுகளே கைவிட்ட அணிசேரா அமைப்பை நேரு நிறுவினார் என்பதாலே தூக்கிபிடித்துக் கொண்டு திரிந்தது என்பது மட்டுமே கான்கிரஸின் சாதனை.

அதிலேயும் இந்தியாவுக்கு முழு ஆதரவு இருக்குமாறு கான்கிரஸ் பார்த்துக்கொண்டாத இல்லையா என்றால் கிடையாது. அணி சேரா அமைப்பிலேயும் தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவால் தீர்மானம் கொண்டு வரமுடியவில்லை. பாக் அதை தடுத்துவிட்டது.

இப்படி வேலைக்கே ஆகாத அமைப்புக்கு மோடி வெனிசுவேலா வரை போகவில்லை என எத்தனை கட்டுரைகள்? எவ்வளவு கண்டங்கள்?
நடைமுறைக்கும் இந்த லூசு இடதுசாரிகளுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதற்கு இந்த அணிசேரா மாநாடும் அதையொட்டி கருத்துக்களும் ஒரு உதாரணம் என்கிறார் ராஜசங்கர்.

ICSE பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்புப் பாடமாக இந்த விஷயம் இருக்கிறது போல! ஒரு வீடியோ பகிர்வு இங்கே
 

   

தாலிபான்களும் இந்திய வெளியுறவுக்கொள்கையும்

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வந்தாலும் வந்தார்! நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் என  ராணுவக் கூட்டாளிகளும், சீனா முதலான  வர்த்தகக் கூட்டாளிகளும் எப்போதடா இவருடைய பதவிக்காலம் முடியுமென்று விழிபிதுங்கிக் காத்திருக்கிறார்கள்! இந்த வரிகளில் ஒரு எழுத்து கூட மிகையில்லை!

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா திடுதிப்பென்று உருவிக்கொள்வது இந்தியாவுக்கு நல்லதா கெட்டதா?போதாக்குறைக்கு ஆப்கானிஸ்தான் அமைதிப்பேச்சு வார்த்தைகளில் இந்தியாவுக்கு இடமில்லையென்று பாகிஸ்தான் முந்திக் கொண்டு, தானே வழியும் ஜீவனுமாய்   தாலிபான்களுக்கு எல்லாமுமாக  இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிற சமீபத்தைய செய்திகளில் இந்தியாவுடைய நிலை என்ன?

அமெரிக்கர்களை அலுப்படைய வைத்திருக்கிற 17 ஆண்டுகாலமாய்த் தொடரும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களோடு நடக்கும் போர் முடிகிற அறிகுறி தெரிவதாக பிபிசி செய்தி இன்று சொல்கிறது.
US and Taliban negotiators have agreed on a draft framework for a peace deal that would put an end to the 17-year conflict in Afghanistan, Washington's top negotiator has said.
US negotiators held six days of talks with the Taliban in Qatar, last week.The Taliban have so far refused to hold direct talks with Afghan officials, whom they dismiss as "puppets". இதென்ன புதிய செய்தியா? இல்லை! இப்படியாகுமென்று 2014 இலிருந்தே அமெரிக்கர்களுடைய தளர்ச்சியும், ராணுவக் கூட்டாளிகள் ஒவ்வொருவராக, ஆப்கானிஸ்தானில் இருந்து விலகிக்கொண்டபோதே அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன என்பதை World Economic Forum மாநாட்டில் கலந்து கொள்ள வந்த ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி சுட்டிக் காட்டி இருக்கிறார்.        
Briefed President last night on the progress we've made. Peace is America's highest priority in , a goal we believe all Afghans share.
அமெரிக்கர்கள் நினைப்பது போல அமைதியோ, அமைதிப் பேச்சுவார்த்தைகளோ உறுதியான ஒரு வடிவத்தை எட்டப் போவதில்லை என்று விஷயம் தெரிந்த வல்லுநர்கள் அபிப்பிராயப்படுவதாக பிபிசி இன்னொரு செய்திக் கட்டுரையில் சொல்கிறது.
இது சென்ற அக்டோபரில் எழுதியதுதான்! ஆப்கன் நிலவரம் என்ன என்பதைக் கொஞ்சம் பரிச்சயம் செய்து கொள்ள உதவியாக இருக்கும்   
  .
#ப்ரதீக்ஜோஷி எழுதியிருக்கிற இந்தச் செய்திக்கட்டுரை இன்றைய
#அக்கம்பக்கம் நிகழ்பவை #ராஜீயஉறவுகளும்சிக்கல்களும் என்று வகைப்படுத்துகிற மாதிரி இருக்கிறதென்பதற்கு உதாரணமாய் இருக்கிறது. In one of latest spate of attacks, the Taliban killed Kandahar police chief Brigadier General Abdul Raziq Achakzai and the provincial chief of the National Directorate on Security (NDS) General Abdul Momin, besides leaving Kandahar governor Zalmai Wesa severely injured என்று செய்தி ஆரம்பிப்பதிலேயே ஆப்கானிஸ்தானில் #தாலிபான்கள் கொட்டம் அடக்க முடியாத அளவுக்கு வலுத்து வருவதைக் காட்டுகிறது

#தாலிபான் பற்றி சுருக்கமாகத் தெரிந்துகொள்ள இங்கே
https://en.wikipedia.org/wiki/Taliban 1989 இல் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியபிறகு அமெரிக்கா மறைமுகமாக ஆப்கானிஸ்தானில் செயல்பாடுகளைத் தொடர்ந்து கொண்டுதானிருந்தது. 2001 இலிருந்து இன்று வரை அமெரிக்கா தன் படைகளைப்போரில் களமிறக்கி #அல்கொய்தா #தாலிபான்பிடியிலிருந்து ஆப்கானிஸ்தானை வொடுவிப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும் #எப்படிஎப்போதுவெளியேறுவோம் என்று தெரியாமல் முழிபிதுங்கிப்போய்க் கிடக்கிறது.அமெரிக்கர்களின் கிறுக்குத்தனத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு காசு பார்க்கத் தெரிகிற சாமர்த்தியம் இன்னமும் கூட பாகிஸ்தானிய ராணுவத்துக்கு அதன் உளவு அமைப்பான #ISIக்குத்தான் இருக்கிறது

தாலிபான்களை எதிர்த்துப் போராடிய பிரிகேடியர் ஜெனெரல் கொல்லப் பட்டிருக்கிறார். அவருடைய இடத்தை நிரப்பப் போகிறவர் யாரென்று கூட அறிவிக்க முடியாத நிலையில் அங்குள்ள அரசு நிர்வாகம் இருக்கிறது. #தாலிபான் க்ளிக் கட்டுக்குள் வைக்கிற சாக்கில் பாகிஸ்தானிய #ISI மறுபடியும் அமெரிக்க மானியங்கள் சலுகைகளில் கொழிக்கப்போகிற சூழல் உருவாகியிருக்கிறது என்பது நல்ல செய்திதானா என்பதோடு அமெரிக்கர்களை எந்த அளவுக்கு நம்புவது என்ற கேள்விக்கும் #இந்தியவெளியுறவுக்கொள்கை விடை கண்டுபிடித்தாக வேண்டும்.
The growing strategic depth that the Taliban in Afghanistan has given to Pakistan's ISI would not be bartered away at any cost, that too at present when it expects greater concessions from the US, which is willing to negotiate things out
          

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை