Tuesday, May 18, 2021

ஹமாஸ் பயங்கரவாத இயக்கமும் பரிதாபத்துக்குரிய பாலஸ்தீனிய மக்களும்!

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாத இயக்கம் ராக்கெட் மற்றும் ஏவுகணைத் தாக்குதத்தல்களைத் தொடங்கி இன்றோடு 10 நாட்களாகிறது. இதுவரை 3000+ ராக்கெட் கணைகள் வீசப்பட்டதற்கு  இஸ்ரேல் சரியான பதிலடி கொடுத்து வருவதில், ஹமாஸ் தீவீரவாதிகளுக்கும் இஸ்ரேலிய ராணுவத்துக்கும் இடையில் சிக்கி அல்லாடுவது  பாலஸ்தீனிய மக்கள் தான்!


இஸ்ரேல் - காஸா இடையிலான மோதல் தொடர்பாக விவாதிக்க ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் நேற்று (மே 16) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐ.நா.,வுக்கான இந்தியத் துாதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது: இஸ்ரேல் - காஸா இடையிலான மோதலில் இந்தியத் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையில் உயிரிழந்த அனைவரின் மறைவுக்கும் இந்திய அரசு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது. இந்த மோதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை உடனடியாக தணிப்பது அவசியம். தற்போதைய மோதல் உச்சநிலையை எட்டாமல் தவிர்க்க அதைச் செய்தாக வேண்டும்.

இருநாடுகளுக்கும் இடையே நேரடியாகவும் அர்த்தமுள்ள முறையிலும் பேச்சுவார்த்தை நடைபெறாமல் இருப்பது இருதரப்பினருக்கும் இடையிலான அவநம்பிக்கையை அதிகரித்து வருகிறது. இது எதிர்காலத்திலும் தற்போது ஏற்பட்டுள்ளதை போன்ற மோதல் சம்பவங்களுக்கான வாய்ப்புகளை மட்டுமே அதிகரிக்கும்.இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான சாதகமான சூழலை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இருதரப்பினர் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை நிலை நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும்.என்பதாக இந்திய அரசின் நிலை தெளிவாக்கப்பட்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன. ஒருதலைப்பட்சமாக பாலஸ்தீனத்துக்கு மட்டுமே ஆதரவு என்ற நிலையிலிருந்து மாறி, ஒரு சமநிலையுடனான பார்வை இந்திய வெளியுறவுக்கொள்கையில் ஏற்பட்டு வருவதை இங்கே கவனித்தாக வேண்டும். பாலஸ்தீன். இஸ்ரேல் என இருநாடுகளையுமே இந்தியா சமமாக  அங்கீகரித்து, நீராட்டிப்பேச்சுவார்த்தையில் மட்டுமே சுமுகத்தீர்வை எட்ட முடியும் என்பதையும் சொல்கிறது.    

ஆனால் பாலஸ்தீனியர்களும் இஸ்ரேலும் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தடங்கலாக இருப்பது எது? யார்? என்ற கேள்விக்கான பதிலில் தான்இப்போதுவரை தொடரும் மோதல்களுக்கான காரணமும் இருக்கிறது. 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதை சுற்றியிருந்த அரபுநாடுகள் எதுவும் ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை எவரும் அங்கீகரிக்கவே இல்லை. 

The Palestine Question என்று தேடினால்  சுமார் 12,00,00,000 தேடல் முடிவுகள் இருப்பதாக கூகிள் தகவல் சொல்லும். சரியான தீர்வு கண்முன்னால் இருந்தும் நாடுவோரைத் தான் காணோம் என்பது பிரச்சினையின் சோகம்.

7ம.நே 

பாலஸ்தீனுக்காக ஆளாளுக்கு பொங்கினாலும் அந்த பாலஸ்தீன் தேசத்தில் அவர்களுக்கு முழு ஆதரவு கிடைக்கின்றதா என்றால் இல்லை. பாலஸ்தீன சிங்கம் யாசர் அராபத் அந்த பரிதாபத்துகுரிய மக்களின் பெரும் தலைவராக விளங்கினார், அவரின் ஒரு விரல் அசைவுக்கே பொத்த பாலஸ்தீனமும் "இண்டிபாதா" என உலகை உலுக்கும் விதமாக தெருக்களில் இறங்கி நடந்தது. அவர் சொன்னால் எல்லாம் சரியாக இருக்கும் என நம்பினார்கள், அவரும் அந்த நம்பிக்கையினை கடைசி வரை காப்பாற்றினார்



(ஆனால் இலங்கையில் அப்படி ஒரு தமிழர் எழுச்சி வரவே இல்லை, வெறும் துப்பாக்கிகளை தூக்கி கொண்டு புலிகள் திரிந்தார்களே தவிர, பெரும் மக்கள் எழுச்சி பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை)

அவரால்(அராபத்)  எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் போராடினார், சோவியத் இருந்தபொழுதே அமையாத பாலஸ்தீனம் அதன் பின் அமையுமா? என்ற அவநம்பிக்கை கொஞ்சமின்றி போராடினார்

அவரின் போராட்டத்தின் உச்சபட்ச வெற்றி அதுவரை பாலஸ்தீன் என்றொரு நாடே இல்லை என சொல்லிவந்த இஸ்ரேல் இறங்கி வந்து "பாலஸ்தீன் பகுதி" என ஒன்றை அறிவித்து அதற்கு சுயாட்சியும் கொடுத்தது

அரபாத்தின் மாபெரும் வெற்றி அது, அந்த அரக்கன் இஸ்ரேலை பணிய வைத்து தங்களுக்கு ஒரு இடமும் அடையாளமும் பெற்று கொடுத்தார்

ஓரளவு அமைதி திரும்பியிருந்தது. அராபத்துக்கும் நோபல் பரிசெல்லாம் கொடுத்தார்கள். ஆனால் ஹமாஸ் இலங்கை பிரபாகரன் பாணியில் ஆட்டம் போட்டது, அராபத் போராட்டத்தை விற்றுவிட்டார் என்றது, அதுவரை ஒரே அணியில் இருந்த பாலஸ்தீன் போராட்டம் ஹமாஸால் பிரிக்கபட்டது. அராபத் எவ்வளவோ சொல்லிபார்த்தார், இதெல்லாம் அழிவில் முடியும், நாங்களெல்லாம் பெரும் அழிவினை கண்டவர்கள், உலகில் எல்லோராலும் சக இஸ்லாமிய தேசங்களாலும் கைவிடபட்டவர்கள் நாம், இந்த முடிவினை கொண்டு சுயாட்சியாக வாழ ஆரம்பிப்போம் அதிலிருந்து பிரிதொருநாள் நமக்கு விடியும் என சொல்லி பார்தார்

ஹமாஸ் அடங்கவில்லை. ஹமாஸின் போக்கு அராபத்துக்கு பெரும் சந்தேகத்தை உண்டாக்கியது, இது தனக்கு எதிரான சதி என்பதை அவர் உணர்ந்தார்.

அவர் அச்சபட்டபடியே ஹமாஸ் பேயாட்டம் ஆட, இஸ்ரேல் அராபத்துக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கிற்று பாலஸ்தீனியர்களை கட்டுபடுத்த வேண்டியது அராபத் பொறுப்பு என அவருக்கு பெரும் நெருக்கடி கொடுத்தது. பாலஸ்தீனியரின் தலைவர் அராபத் அவர் ஒருவரைத்தான் அந்த மக்களின் பிரதிநியாக கருதுகின்றோம், துப்பாக்கி தூக்கும் எல்லோரையும் அவருக்கு சமமாக நினைத்து பேசமுடியாது என சொன்ன இஸ்ரேலின் ராஜதந்திர கருத்தில் சில தந்திர வரிகளும் இருந்தன‌. ஹமாஸ் செய்த அட்டகாசமெல்லாம் அராபத் தலையில் விழ அவரும் வீட்டுகாவலில் வைக்கபட பின் அவரும் காலமானார்

அவருக்கு பின் முகமது அப்பாஸ் பாலஸ்தீன ஆட்சியாளராக வந்தாலும் போராட்டம் ஹமாஸின் கரங்களுக்கு சென்றுவிட்டது. இப்பொழுது ஒரு பெரும் வல்லரசுக்கு இணையாக அதாவது விமானபடை கப்பல் படை மட்டும் இல்லாமல் பெரும்  ராக்கெட் தாக்குதலில் ஹமாஸ் இறங்கியிருக்கின்றது.ஆனால் அதனால் இஸ்ரேலை அசைத்து பார்க்க முடிகின்றதா என்றால் இல்லை , மாறாக இஸ்ரேல் தன் வான் தடுப்பு சாதனங்களை சோதித்து புதிது புதிதாக மேம்படுத்தி பலம்பெறுகின்றது.

ஹமாஸின் தாக்குதலும் இஸ்ரேலின் பதிலடியும் ஒருமாதிரி சந்தேகங்களை பாலஸ்தீனத்திலே ஏற்படுத்தியிருக்கின்றன என்பதுதான் நிஜம், முகமது அப்பாஸின் பேட்டி அதைத்தான் சொல்கின்றது

அராபத் ஆயுதமுனையில் பெறாத வெற்றியினை ஹமாஸ் பெற்றுவிடும் என்பது வெறும் கனவு, அதன் கடும்போக்கால் பாலஸ்தீனத்துக்கு அழிவு வருமே தவிர நன்மை ஏதும் விளையாது.

இலங்கையில் பிரபாகரன் கோஷ்டி செய்த அதே அடாவடியினை ஹமாஸ் செய்து கொண்டிருக்கின்றது

எந்த தீவிரவாத இயக்கமும் இன்னொரு நாட்டின் பின்னணியில்தான் செயல்படும் நேரம் வரும்பொழுது அந்நாட்டை பஞ்சாயத்துக்கு இழுத்தும் வரும். ஆனால் ஹமாஸ் தன் பின்னணி நாடுகள் எதையும் அமைதி பேச்சுவார்த்தைக்கு இழுத்து வருவதாகவும் தெரியவில்லை அல்லது அப்படி அழைக்கவுமில்லை

நிலமை மிக மோசமாக செல்கின்றது, இஸ்ரேலோ இனி தாக்குதலை நிறுத்தும் திட்டமில்லை என சொல்லியாயிற்று.

துருக்கி முதலான இஸ்லாமிய நாடுகள் பாலஸ்தீன அமைதிகாக ஐ.நா அமைதிபடையினை அனுப்ப வேண்டும் என்கின்றது இஸ்லாமிய நாடுகளும் அதை வரவேற்கின்றன‌. ஆனால் பாலஸ்தீன அதிபர் அப்பாஸோ, ஹமாஸோ இதுபற்றி ஒன்றும் சொல்லவில்லை என்பதுதான் உலகின் நெற்றியினை சுருக்கும் கேள்விகுறி.

புலிகள் இந்திய படைகளை கண்டு அஞ்சியது போல் அஞ்சுகின்றார்களா, அமைதிபடை நின்றால் தங்கள் போராட்டம் தொடராது என கருதுகின்றார்களா என்பதுதான் தெரியவில்லை.உலகில் பல விஷயங்கள் குழப்பமானவை, புரிந்து கொள்ளமுடியாதவை, யாரோ எங்கோ பலன் பெற தூண்டிவிடப் படுபவை

ஹமாஸால் இஸ்ரேலை ராணுவரீதியாக வெற்றிகொள்ள முடியாதபொழுது பாலஸ்தீன மக்கள் அமைதியாக வாழ ராஜதந்திரம், சக நாடுகள் மூலம் பாதுகாப்பு என எதையாவது செய்து அவர்கள் வாழ்வுக்கு உத்திரவாதம் கொடுக்க வேண்டும்

மாறாக வெல்லவும் மாட்டோம் அதே நேரம் அமைதியாகவும் மாட்டோம் என யுத்த முஸ்தீப்பிலே இருப்பது பாலஸ்தீன மக்களின் எதிர்காலத்துக்கு பெரும் ஆபத்து.பாலஸ்தீன மக்களுக்கு அந்த மக்களின் பெரும் காவலன் அராபத் என்ன தீர்வினை பெற்று கொடுத்தாரோ அதை முழுக்க பெற்றுகொடுத்து அவர்களை அச்சமின்றி காவல்காத்து உரிய காலம் வந்து பாலஸ்தீனம் விடுவிக்கபடும் வரை துணை இருக்க வேண்டியது இஸ்லாமிய நாடுகளின் கடமை.

அதை செய்தால் பாலதீனர்கள் வாழ்வில் வசந்தம் திரும்பும், அது அல்லாது ஹமாஸ் துப்பாக்கியினையும் ராக்கெட்டையும் மட்டும் நம்பி இருந்தால் இந்த கலவரங்கள் ஓயாது, காற்று இஸ்ரேலுக்கு சாதகமாகவே வீசும்

ஒரு தலைவன் உருவாகி அவன் பாலஸ்தீன மக்களின் பிரதிநிதியாக அறியபட்டு தங்கள் வலிகளை அராபத் போல் உலகுக்கு தெரிவிக்காமல் அங்கு அமைதி திரும்பாது.காலம் இன்னொரு அராபத்தை அவர்களுக்கு கொடுக்கட்டும், அந்த பெருமகன் திரும்பி வந்தாலொழிய அவர்களுக்கு அமைதி திரும்ப போவதில்லை   

ஸ்டேன்லி ராஜன் சொல்வதில் எனக்கு சில இடங்களில் உடன்பாடு இல்லை. உதாரணத்திற்கு மேலே கடைசி பாரா. இப்படி சில முரண்கள் இருந்தாலும் தமிழ் இணையச் சூழலில் இத்தனை நிதானமாகப் பிரச்சினையை எழுதுகிறவர்கள் மிகக்குறைவு என்பதால் மட்டுமே எங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். 

மேலும் விஷயங்களோடு தொடர்ந்து பேசுவோம். 

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை