"நாங்கள் எழுந்து விட்டோம்! எங்களுடைய தேசம் இனி அவமதிப்பும், அவலப் படுவதுமாக இருக்காது" என்று அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் மா சே துங், சீன மக்கள் குடியரசாக அறிவித்த நிகழ்வின் கொண்டாட்டம் இது. பத்தாண்டுகளுக்கு முன்னால், பொன்விழாக் கொண்டாட்டமாக நடந்தது, இப்போது மறுபடியும் சீன அரசின் வலிமையை தம்பட்டம் அடித்துக் கொள்கிற மாதிரி மறுபடி அரங்கேறியிருக்கிறது.
சீனாவின் உள்ளூர்மயமாக்கப் பட்ட கம்யூனிசம், கலாச்சாரப் புரட்சி என்று சொந்த மக்களையே லட்சக் கணக்கில் கொன்று குவித்தது, மார்க்சீய தத்துவம், சோஷலிசம் எல்லாம் இப்போது எங்கே போனது என்றே எவருக்கும் தெரியவில்லை. ஒரு உறுதியான தத்துவம், கொள்கைப் பிடிப்பில் அங்கே கம்யூனிசம் எவரிடத்திலும் இல்லை. அதைப் பற்றி அங்கே எவரும் கவலைப்படுவதாகக் கூடத் தெரியவில்லை!
ஆனால் டெங் சியாவோ பிங், காலத்திற்கேற்ற மாதிரி வரட்டுத் தத்துவம் பேசிக் கொண்டிருந்தால் மக்களுக்குச் சோறு கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டு செய்த சீர்திருத்தங்கள், தங்களுடைய நாட்டு நலனை எந்த வகையிலும் விட்டுக் கொடுக்காமல், அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்குக் கதவைத் திறந்து விட்டதும், வேலை வாய்ப்புக்களைப் பெருக்கியதும், சீனாவை இன்றைக்கு வலிமையான அரசாக மட்டும் அல்ல, வலிமையான பொருளாதார சக்தியாகவும் உயர்த்தியிருக்கிறது.
சீனப்பெருமிதம் என்ற பெயருடன் சீனாவின் அறுபதாவது ஆண்டுக் கொண்டாட்டங்கள் பெய்ஜிங்கில் இன்று,
மிகவும் கறாரான திட்டமிடுதலோடு இன்று நடக்கிறது.
சென்ற வருடம்,
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைத் திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்திய அனுபவம்,
சீன அரசின் வலிமையை உலகுக்குப் பறைசாற்றும் விதமாக,
சீனப் பெருமிதம் என்ற பெரு விழாவாகசீனத் தலைநகர் பெய்ஜிங்கில்,
இருபத்து மூன்று லட்சம் படைவீரர்கள் அணிவகுப்புடன் ஏகக் கோலாகலமாக நடக்கிறது.
இதற்கான தயாரிப்பு வேலைகள், ஒத்திகை, பல மாதங்களாகவே,
கறாரான திட்டமிடுதலின் கீழ் நடந்து வந்தன.
நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் இன்றைக்கு வெளியாகியிருக்கும் செய்திக்கட்டுரைகள்,
இந்தத் தயாரிப்பு,
ஒத்திகை எவ்வளவு கடினமான முறையில் நடத்தப் பட்டது என்பதைச் சொல்கிறது.
படைவீரர்கள், தங்களுடைய துப்பாக்கிகளை ஒரே மாதிரியாக மணிக்கணக்கில் வைத்திருக்கப் பயிற்றுவிக்கப்பட்டார்கள். கராத்தே சினிமாக்களில் பயிற்றுவிக்கப்படுவதைப் போல, அவர்கள் ஒரே மாதிரியாகத் தான் வைத்திருக்கிறார்களா என்பதை, நூலை வைத்தி, ஊசி மூலமாகவோ, பயிற்சியாளர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு மணி நேரத்திற்குக் குறையாமல் அசையாமல் நிற்கவும், அடுத்தஒரு மணிநேரத்திற்குத் தடுமாறாமலும், மூன்றாவது மணிநேரத்தில் சோர்ந்து விழுந்து விடாமலும் இருப்பதற்குப் பயிற்சி, பல மாதங்களாக நடந்தது என்று சீன அரசின் அதிகாரப்பூர்வமான செய்திப் பிரிவு க்ஸின்ஹுவா தெரிவிக்கிறதாம்!
நூலிழை பிறழாமல், 'மக்களுக்குத் தொண்டு', 'வாழ்க பெருந்தலைவரே' கோஷத்தையும் எழுப்பவும் பயிற்சி! இப்படிக் கடுமையான பயிற்சியில், சரியாகச் செயல் படாதவர்களுக்காக மன நல மருத்துவ உதவியும் கிடைத்ததாம்!
செப்டம்பர் பன்னிரண்டு தேதி வரை ஆயிரத்து முன்னூறு வீரர்களுக்கு, மன நல மருத்துவர்களின் வழிகாட்டுதல் கிடைத்ததாக அரசுச் செய்திக் குறிப்பு சொல்கிறது.
இந்த ஒத்திகையைத் தங்களுடைய மாடியிலிருந்து படம் எடுக்க முயன்ற ஜப்பானியச் செய்தி நிறுவனமான க்யோடோ நியூஸ் எஜென்சியைச் சேர்ந்த மூன்று பத்திரிகையாளர்களை, சீன ராணுவத்தினர் அடித்து உதைத்து, மண்டியிடச் செய்ததாகவும், இரண்டு கணினிகளைச் சேதப்படுத்தியதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது.
BEIJING, Sept. 18 Kyodo –
Chinese authorities assaulted three Kyodo News journalists in Beijing on Friday night when they were covering a rehearsal of a military parade the country will stage in the city on Oct. 1, the 60th anniversary of the founding of the People’s Republic of China.
The authorities kicked one reporter and two cameramen and hit their heads to make them knee down at a room of Beijing Hotel, which faces Chang’an Avenue that runs east to west past the Tiananmen Square area where the National Day celebrations will be centered.
The authorities, who stormed into the room around 8 p.m. without notice, destroyed two computers by throwing them out of the room to the corridor.
China’s Foreign Ministry ordered news organizations not to take photos when the country conducted a rehearsal Sept. 6, but the ministry has not issued such an order since then.
Just as the previous rehearsal, tanks, armored vehicles and missile-carrying vehicles traveled the central Beijing in the Friday event.
It will be the first time for China to hold a military parade since 1999, when it celebrated the 50th anniversary of its founding.
இப்படியான அடாவடித்தனமெல்லாம் நிறையவே இருந்தாலும்,சீனாவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில், முனைவர் நா. கண்ணன், கொரியாவில் இருந்து கொண்டு நிகழ்ச்சி முழுவதையும் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு, வியந்து எழுதியதைப் படிக்க தலைப்பைச் சொடுக்கவும் ......
/ஆரம்பம் ரொம்ப பயமுறுத்திவிட்டது. பழைய மாசேதுங் காலத்து Red Army Parade
போல் அடுக்கடுக்காய் இராணுவ தளவாடங்கள், கையில் துப்பாக்கி ஏந்திய
சிப்பாய்கள், டாங்குகள், ராக்கெட்டுகள், misseles of all sorts, விமான
அணிவரிசை. சரி மூடித்தொலைக்கலாம் என்றால், என்னதான் இருக்கிறது
அவர்களிடம் பார்த்துவிடலாமே என்று ஒரு அசட்டு ஆசை. இந்த Parade
மற்றவர்களை பயமுறுதத்தானே! ஜப்பான் வாலை சுருட்டிக்கொண்டு ஒடுங்கி
இருப்பதை கற்பனை செய்ய முடிந்தது. கடைசியில் வந்த அணு ஆயுத தடவாளங்களைப் பார்த்த பிறகு இந்தியாவும் நல்ல பிள்ளையாக நடந்து கொள்வதே விவேகம் என்று தோன்றியது. Extremely impressive parade./
ஒரு உறுதியான அரசியல் நிலைப்பாடு. எந்த ஒரு சூழ்நிலையியிலும், தேசத்தின் நலன்களை முன்னிறுத்தி மட்டுமே எடுக்கப்படுகிற அரசியல், பொருளாதார முடிவுகள், தொழில் நுட்பம் வேண்டியிருக்கிற அதே நேரம், கிராமங்களில் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதிலும் கவனம், குறைந்தபட்ச உத்தரவாதம்,கல்வி இப்படி, பலவிஷயங்களில், சீனா உறுதியோடு நின்று சாதித்ததில் இருந்து நாம் நிறையவே கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
அந்த நாள் என்று வரும்?