Wednesday, December 4, 2019

டொனால்ட் ட்ரம்ப்பாக இருப்பது மெத்தக் கடினம்தான்!

ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு! அதே நபர்  ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு! டொனால்ட் ட்ரம்ப்புக்கு மட்டும் அந்த நுண்ணிய வேறுபாடெல்லாம் பொருந்தாது போல இருக்கிறது! அமெரிக்க அதிபராக இருப்பதால் யாரையும், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று டொனால்ட் ட்ரம்ப் நினைத்துக் கொண்டிருக்கிற மாதிரித்தான் போகிற இடங்களில் எல்லாம் ஒரண்டையை இழுத்துக் கொண்டு வருகிறார். NATO ராணுவக்கூட்டின் 70வது பிறந்த தினத்துக்காக லண்டனுக்குப் போன டொனால்ட் ட்ரம்ப் அங்கே பிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மேக்ரோனுடன் ஒரண்டையை இழுத்திருக்கிறார். கேலிப்பொருளாகவும் மாறியிருக்கிறார்!


This happens at every NATO summit with Trump. Every G7. Every G20. The US President is mocked by US allies behind his back.

ட்ரம்ப் எங்கேபோனாலும் இதே கதைதான்!  முதுகுக்குப் பின்னால் கேலிசெய்யப்படுவது மட்டும்தான் மிச்சம்!
 

CNN சேனலுக்கும் டொனால்ட் ட்ரம்புக்கும் ஏற்கெனெவே ஏழரை. இப்போது கொண்டாடாமல் வேறு எப்போது கொண்டாடுவது?அதனால்  ஜெர்மன் சேனல் இதை எப்படிச் சொல்கிறார்கள் என்று பார்த்து விடலாம். வீடியோ 7 நிமிடம் 


In one moment of unscripted exasperation at Nato, Macron showed Trump what the whole world thinks of him now என்று தலைப்பிட்டு கிளெமென்ஸ் மிஷல்லோன் The Independent இல் எழுதியிருக்கிற விமரிசனம் தலைப்பிலேயே விஷயத்தைச் சொல்லி விடுகிறது. 


ராபர்ட் டி நிரோ டொனால்ட் ட்ரம்ப்பை போலி என்று சொல்லி முடித்துவிடுவதைப் பார்க்காமல் பதிவை முடிக்க முடியுமா? டொனால்ட் ட்ரம்ப்பாக இருப்பது மெத்தக் கடினம்தான்! மறுக்க முடியாது! டொனால்ட் ட்ரம்ப்பை சகித்துக் கொள்ளமுடிவது முடியவே முடியாத அளவுக்குக் கடினம் தான்!

ராஜீய உறவுகளில் ஒரு நாசூக்கு, கண்ணியமான வார்த்தைகள், ஏற்றுக்கொள்ள முடிகிற அளவுக்குக் கண்ணியமான வார்த்தைகள் அவசியமே இல்லை என்ற புதுவிதமான விஷயத்துக்கு  டொனால்ட் ட்ரம்ப் முன்னோடியாக இருக்கிறார் என்பது அமெரிக்காவின் பரிதாபம்!

மீண்டும் சந்திப்போம்.        
  

Friday, November 15, 2019

வெளியுறவுக் கொள்கை! புரிந்து கொள்ள உதவியாக .....

ஒரு நாட்டின் வெளியுறவுக்கொள்கை என்னென்ன அடிப்படைகளில் உருவாக்கப்படுகிறது? இந்த விஷயத்தை முந்தையபதிவுகளில் கொஞ்சம் பார்த்து இருக்கிறோம். இதையே கொஞ்சம் அனுபவமுள்ள ஒருவர் சொன்னால் எப்படியிருக்கும்?


இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில், நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் Dr. S. ஜெய் சங்கர், புது டில்லியில் 4வது ராம்நாத் கோயங்கா உரை என்று, இந்த 48 நிமிட வீடியோவில், ஐந்து கட்டங்களாக உருமாற்றம் ஆன இந்திய வெளியுறவுக் கொள்கை பற்றிக் கொஞ்சம் விரிவாகவே பேசுகிறார். 


இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும் JNU விலும் பணியாற்றிய பிறகு தற்போது சிங்கப்பூரில் Institute of South Asian Studies, National University of Singapore இல் இயக்குனராக இருக்கும் C ராஜ மோகனுடன், பாகிஸ்தான், ஆர்டிகிள் 370. RCEPயில் சேருவதில்லை என்ற முடிவு இப்படி வெளியுறவு விவகாரங்களில் நடப்பு நிலவுரங்களைகுறித்தான கேள்விகளுக்குப் பதிலளித்து உரையாடுகிற இந்த வீடியோ 43 நிமிடம்.

கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் வெளியுறவு விவகாரங்கள் புரிந்துகொள்ளக் கடினமானதல்ல. என்று நான் இந்தப்பக்கங்களில் சொல்லிவருவது ஏனென்பது 90 நிமிடங்கள் செலவழித்து இந்த இரு வீடியோக்களைப் பார்த்தாலே புரியும்.

மீண்டும் சந்திப்போம்.
         

Thursday, October 31, 2019

சிரிய விவகாரமும் American Tianxiaவும்! மாறிவரும் சூழ்நிலை!

கி.பி 1850 -1950, 1950-2050, என முந்தைய இரண்டு நூற்றாண்டுகளும் எவர் எவருடைய ஆதிக்கத்தில் இருந்தன, இருக்கின்றன  என்பதை நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். Tianxia என்கிற சீன வார்த்தை கோடிட்டுக் காட்டுவதும் கூட அதைத்தான் என்பதை இங்கேவரும் நண்பர்கள் நினைவில் வைத்திருப்பார்கள்  என்றே  நம்புகிறேன். முந்தைய நூற்றாண்டில்  பிரிட்டன் காலனியாதிக்க நாடாகவும் ராணுவம், பொருளாதார வலிமை மிக்க நாடாகவும் தொழிற் புரட்சியின் முழுப்பலனையும் அனுபவித்த வரலாறு நினைவிருக்கிறதா? அந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த இரு உலகப்போர்களில் பிரிட்டன் பவிசிழந்து அமெரிக்கா நிகழ் நூற்றாண்டின் வலிமையான ஆதிக்க நாடாக இருப்பதும் கூட நடப்பு வரலாறு தான்! American Tianxia என்றொரு சொல்லாடலை சீனர்கள் 2013 இல் தான் உருவாக்கினார்கள், அதுவும் 2050 தொடங்கி வரும் இந்த நூற்றாண்டு சீனாவுடையதுதான் என்ற கருத்தாக்கத்தை சொல்வதற்காக மட்டுமே என்பது முந்தைய பதிவுகளில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம்! வரலாறு பிடிக்கவில்லை என்றாலும் அதிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளாத வரை அது நம்மை விடப்போவதில்லை என்பதையும் கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டியிருக்கிறதே!


ஷி ஜின்பிங்கும் பிளாக்செயின் டெக்னாலஜியும்! என்று இன்னொரு வலைப்பக்கத்தில் எழுதிய போது, சீனர்கள் எப்படி வருகிற நூற்றாண்டு தங்களுடையது தான் என்பதில் உறுதியாகச்  செயல்படுகிறார்கள் என நண்பர்கள் தெரிந்துகொள்ள விரும்புவார்கள்  என்ற நம்பிக்கை இருந்தது.


மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக சிரியாவில் சமீப நாட்களில் நடக்கும் விவகாரங்களைக் கவனித்தால் டொனால்ட் ட்ரம்ப்பே, சீனர்களிடம் நீங்கள் தான் உலகத்தின் நடுநாயகம் என்று இருப்பை விட்டுக் கொடுத்து விடுவாரோ என்கிற சந்தேகம் வலுக்கிறது. என்னதான் டொனால்ட் ட்ரம்ப் ISIS தலைவர் அபு பக்கர் அல் பக்தாதியும் அவனது நம்பர் 2வும் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதை மிகப்பெரிய சாதனை என்று காட்டிக் கொள்ள விரும்பினாலும் சிரியாவை மையமாக வைத்து அமெரிக்காவும் ரஷ்யாவும் 8 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியகிழக்கு பிராந்தியத்தில் நடத்திவரும் இழுபறிப்போராட்டத்தில் ரஷ்யாவை ஜெயிக்க விட்டு விட்டார் என்பது தான் பெரும்பாலான அமெரிக்கர்களின் கருத்தாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. மத்திய கிழக்கில் ரஷ்யா ஜெயித்திருக்கலாம்! ஆனால் பழைய காலம் மாதிரி வலிமையான நாடாக ஆகிவிடமுடியாது என்ற மாதிரியான பொருமல்களை நிறையப் பார்க்க முடிகிறது. 

Foreign Policy டாட் காம் தளத்தில் Russia Is the Only Winner in Syria என்று தலைப்பிட்டு  REESE ERLICH எழுதியிருக்கிற ஒரு அலசல் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக சொதப்பியிருப்பது அமெரிக்க வெளியுறவுக்  கொள்கை முடிவுகளில் ஏகப்பட்ட குழப்பங்களை உண்டாயிருக்கிறது  அமெரிக்க NATO கூட்டாளியாக இன்னமும் இருக்கிற துருக்கியின் எர்துவான் ரஷ்யர்களின் வளையத்துக்குள் போய்விட்டார் என்று ஆரம்பித்து அங்கே என்ன நடக்கிறது என்பதை விவரிக்கிறார்.    கொஞ்சம் படித்துப் பாருங்கள்!

Russia’s resurgence in the region comes as Turkey, long a NATO member and Western ally, is realigning—and appears to be tilting toward Russia. Turkey purchased and recently took delivery of the Russian-made S-400 missile defense system, which caused outrage in Washington. The first part of a new Russia-Turkey natural gas pipeline is complete, and Russia plans to build four nuclear power plants in Turkey.

Russia, like the United States, pursues its own economic and military interests in the Middle East. Both powers promote highly profitable sales by their respective arms manufacturers. Both seek to control oil prices, with Russia selling to countries such as Turkey and Israel, while the United States is buying from Gulf countries. And both are apparently willing to throw Kurds under the bus when necessary to ally with the powerful and geostrategically important government in Ankara. 

சிரிய விவகாரங்களில் டொனால்ட் ட்ரம்ப் சாதித்ததென்ன? எட்டாண்டுகளாக கூட்டாளிகளாக இருந்த குர்து மக்களைக் கைகழுவி விட்டதில், அமெரிக்காவை ஒரு நம்பகமான கூட்டாளி என்று எவரும் நினைக்க முடியாதபடி, அதன் நம்பகத் தன்மையைச் சிதைத்துவிட்டார்.அல் பக்தாதியைக் கொன்றதனால் அவருக்கு எந்தவிதத்திலும் அரசியல் ரீதியான பலனும் கிடைக்கப்போவதில்லை.   2016 தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னபடி அவரால் அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்ளவும் முடியவில்லை.  ஒரு காலத்தில் உலகப் போலீஸ், உலகத்தின் காவலன் என்றிருந்த நிலைமை மாறி வெறும் சிரிப்புப் போலீசாகி நிற்பது காலத்தின் கோலம்.

ரஷ்யா பழைய காலத்து  சோவியத் யூனியன் மாதிரி மீண்டெழுந்து விடுமா என்ற கேள்வியே இப்போது இல்லை. ஆனாலும், புறக்கணித்துவிட முடியாத ஒரு நாடாகத்தான் இருக்கிறது. சீனாவுடன் பலவிதப் பிரச்சினைகள் இருந்தாலும், கூடியவரை சீனாவுடன் இணக்கமாகவே இருப்பதைப் பார்க்க முடிகிறது.  ஒரு பத்துப் பதினோரு ஆண்டுகாலத்துக்கு முன்பு வரை உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்த ஜப்பான், இன்று அமெரிக்காவையே முழுக்க நம்பியிருக்க முடியாது என்கிற சூழ்நிலையில், சீனாவுடன் கூடியவரை அனுசரித்துப் போக வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறது.

இப்படி சூழ்நிலைகள் சீனாவுக்கே அதிக சாதகமாக இருந்தாலும் கூட, இன்றைய காலகட்டத்தில் அமெரிக்கா தான் உலகின் மிகவலிமையான பொருளாதாரமாகவும், ராணுவ சக்தியாகவும் இருக்கிறது. சீனா எழுபது என்று இந்தமாதம் ஆரம்பித்த முதல்பதிவில் சொன்னபடி, சீன அதிபர் 2049 இல் சீனாவை ஒரு முழுதும் வளர்ந்த நாடாக, பொருளாதார சுபிட்சம் நிறைந்த நாடாக்குவோம் என்று சூளுரைத்திருப்பது நடக்குமா? வரவிருக்கும் நூற்றாண்டு சீனாவுடையதுதானா என்ற கேள்விகளுக்கெல்லாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். 

மீண்டும் சந்திப்போம்.                    
     

Monday, October 21, 2019

சீனப் பூச்சாண்டி! ஒரு பகுதி நிஜம் தான்! ஆனால் ......?

கொஞ்சம் சொல்லுங்கள்! சீனாவைப் பற்றி எந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறோம்? கம்யூனிஸ்ட் நாடாகச் சொல்லிக் கொண்டாலும், நம்மூரில் கம்யூனிஸ்ட்கள் மிகக் கடுமையாக எதிர்த்த WTO, Globalisation இவைகளைப் பயன் படுத்திக் கொண்டு சீனா, இன்றைக்கு உலகத்தில் உள்ள முதலாளித்துவ நாடுகளைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு, பகாசுர நிறுவனங்களை வளர்த்துக் கொண்டிருப்பதை பற்றிக் கொஞ்சமாவது அறிந்திருக்கிறோமா? ஒரு சாம்பிளுக்கு....  
    

இந்த ஆண்டுத் துவக்கம் முதலே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப்போரில் முதலில் சிக்கிக் கொண்டது சீனாவின் Huawei வாவே தொலைத் தொடர்பு நிறுவனம் தான்!  ஸ்மார்ட் போன்களைத் தயாரிப்பதில் உலகின் இரண்டாவது பெரிய நிறுவனம் என்று சொல்வதை விட 5G தொலைத்தொடர்பு கட்டுமான  சாதனங்களை தயாரிப்பதில் உலகிலேயே முதல் பெரிய நிறுவனமாகவும் இருக்கிறது! வருட வருமானம் நூறு பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 7 லட்சம் கோடிரூபாய்கள்!) அமெரிக்க வர்த்தகத்தடைகளுக்குப் பின்னாலும் கூட இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் 86 பில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டியிருக்கிறது என்பதோடு உள்நாட்டுச் சந்தையிலும் 40% என விற்பனையில் முதலிடம் பிடித்திருக்கிறது. 


இந்த 24 நிமிட வீடியோவைக் கொஞ்சம் கவனமாகப் பாருங்கள் ஐந்தாம் தலைமுறை தொலைதொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்வதில் மட்டுமல்ல, 5G சேவைகளுக்கான கட்டுமானம், தொழில்நுட்பம் இவைகளிலும் வாவே உலகின் முதல் இடத்தில் இருக்கிறது. அதுவும் போக ஆறாம் தலைமுறை தொலைத்தொடர்பு குறித்தும் இப்போதே தீவீர ஆராய்ச்சியிலும் வாவே முன்னிலை வகிக்கிறது. Backdoor பின்வாசல் வழியாக வாவே சீன அரசுக்காக உளவுபார்க்கிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வாவே  நிறுவனத்துக்குத் தடைவிதித்திருக்கிறது! (கூகிள் முதற் கொண்டு அமெரிக்க நிறுவனங்களும் அதைத்தான் ஆரம்பத்திலிருந்தே செய்து கொண்டிருக்கின்றன என்பதைக் கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!) ஆஸ்திரேலியா, தைவான் போன்ற நாடுகளும்  கூட Huawei நிறுவனத்தின் தயாரிப்புகளுக்குத் தடை விதித்திருக்கின்றன.
  

மலிவான எலெக்ட்ரானிக்ஸ். செல்போன் தயாரிப்பு, இவை தான் சீனா என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்த 13 நிமிட வீடியோவை அவசியம் பார்த்தே ஆக வேண்டும்.

சீனப் பூச்சாண்டி என்றே எப்போது பார்த்தாலும் பயம் காட்டிக் கொண்டே இருப்பதாக, அலுப்பாக இருக்கிறதா?

சீனா எழுபது! நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. சிறிது சிறிதாகவாவது பார்க்கலாம் இல்லையா? மீண்டும் சந்திப்போம்.   
  

Monday, October 14, 2019

தடுமாற்றங்கள்! டொனால்ட் ட்ரம்ப்! துருக்கி சிரியா! #brexit

இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வடக்கு சிரியாவில் மீதமிருக்கும் அமெரிக்கப் படைகளையும் வாபஸ் பெறுவதென்ற முடிவை அறிவித்திருக்கிறார். மத்திய கிழக்கில் முடிவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் போரில் அமெரிக்காவுக்கு என்ன வேலை என்பது அவருடைய வாதம். 



ISISக்கு எதிராக அமெரிக்கர்களோடு சேர்ந்து போராடிய குர்து இன மக்கள் ட்ரம்பின் இந்த முடிவை தங்களுக்கெதிராக இழைக்கப்பட்ட அநீதி, நம்பிக்கை துரோகமாகவே பார்ப்பதாக செய்திகள் சொல்கின்றன. ரஷ்யாவின் ஆதரவோடு சிரியாவின் அதிபராக இருக்கும் அசாதின் அரசோடு குர்துகள் ஒரு இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, துருக்கியின் தாக்குதலை எதிர்கொள்ள சிரிய ராணுவத்துடன் கைகோர்த்து இருப்பதாகவும் தகவல்கள் சொல்வதில் அமெரிக்காவை ஒரு  நம்பகமான கூட்டாளியாக இனிவரும் காலங்களில் எந்தவொரு நாடும் ஏற்றுக்கொள்ளத் தயங்கும் என்ற மாதிரியான கறை அழுத்தமாகப் படிந்திருக்கிறது. அமெரிக்கா, இனி மேல் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று பேசினால் கேலிக்குரியதாகத்தான் இருக்கும் போல!

300 கி.மீ. அகலம், 50 கி.மீ. ஆழமாக சிரியாவுக்குள் துருக்கி தனது ராணுவத் தாக்குதல்களைத் தொடங்கியிருப்பதில், சிரிய ராணுவம் வடக்கு எல்லைப்பகுதியில் துருக்கியப் படைகளை எதிர்கொள்ளத் தயாராகச் சென்று விட்டன.  



Brian Kilmeade over at
got it all wrong. We are not going into another war between people who have been fighting with each other for 200 years. Europe had a chance to get their ISIS prisoners, but didn’t want the cost. “Let the USA pay,” they said...
4.4K
8.8K
31.8K


....Kurds may be releasing some to get us involved. Easily recaptured by Turkey or European Nations from where many came, but they should move quickly. Big sanctions on Turkey coming! Do people really think we should go to war with NATO Member Turkey? Never ending wars will end!
4:44 PM · Oct 14, 2019
ஆனால் டொனால்ட் ட்ரம்ப் ட்வீட்டரிலேயே தனது யுத்தம் நடந்தால் போதுமென்ற முடிவுக்கு வந்துவிட்ட மாதிரித்தான் தெரிகிறது. Contrary to Trump's allegation, US officials have told CNN there are no indications that the Kurdish-led Syrian Democratic Forces have intentionally released any of the 10,000-plus ISIS prisoners in SDF custody as part of a bid to draw international support in the face of a Turkish assault on Kurdish areas in north Syria. என்கிறது CNN செய்தி.

The withdrawal of U.S. troops from northern Syria this week triggered two conversations in capitals across the region. The more immediate was about whether the U.S. government could be trusted as a partner, given its apparent abandonment of the Kurds. (Admittedly, Washington’s credibility deficit predates President Donald Trump’s surprise gambit.) என்று பிலால் பலோச் ஐந்துநாட்களுக்கு முன் foreign policy dot com   தளத்தில் எழுதியதையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும். டொனால்ட் ட்ரம்ப் மட்டுமல்ல, மேற்கத்திய உலகு மொத்தமுமே குர்து மக்களைக் கைவிட்டுவிட்டதென்றும் CNN மேலும் ஒரு செய்தியில் சொல்கிறது. எட்டு ஆண்டுகளாக நடந்து வந்த போர்க்களத்தில் காட்சிகள் மாறியிருப்பதில் என்னென்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாமல் மேற்கத்திய ஊடகங்கள் தடுமாறுவது நன்றாகவே தெரிகிறது .
      
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்னாலேயே பிரிட்டன் ஒரு referendum நடத்தி முடிவு செய்துவிட்டாலும், வெளியேறுவதற்கான வழி முறைகள் எதையும் முடிவுசெய்யாமலேயே சண்டித்தனம் செய்து வருகிற மாதிரித்தான் தற்போதைய அரசியல் நிலவரங்கள் இருக்கின்றன. அக்டோபர் 31க்குள் டீலா நோ டீலா என்று முடிவெடுக்கப்போகிற மாதிரி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. இதுசம்பந்தமாக இன்றைக்கு நிறைய செய்திகளைப் படித்த பிறகும் கூட இதுதான் உண்மை நிலவரம் என்று எதையும் உறுதியாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. 

தலைப்பில் சொன்ன மாதிரி, தடுமாற்றங்கள் ஒன்று மட்டும் தான் நம்மைச் சுற்றிவரும் செய்திகளில் புலப்படுகின்றன.

மீண்டும் சந்திப்போம்.                    

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை