Wednesday, April 10, 2019

சீனாவை எந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறோம்?

சீனாவைப் பற்றி இங்கே இந்தியாவில் எந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறோம்?

In the absence of international censure, China has stepped up its systematic persecution of Muslims, under the dubious pretense that it is fighting "terrorism" and protecting its economic interests. But more than just an attack on human rights, the crackdown is representative of President Xi Jinping's totalitarian ambitions.என்று ஆரம்பித்து ப்ரம்ம செலானி இங்கே எழுதியிருக்கிற கட்டுரையை ஒருமுறை படித்துவிடும்படி நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். 


பிரிவினைவாதம், தீவிரவாதம்.பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில்  ஜின்ஜியாங் பிரதேசத்தில் உய்கர் முஸ்லிம்கள் மீது சீன அரசும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் அவிழ்த்து விட்டிருக்கிற ஒடுக்கு முறைகள்,  இஸ்லாத்தை கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமானதாக மாற்ற மேற்கொள்ளப்படும் கடும் நடவடிக்கைகள் எல்லாம் கேள்வி கேட்பார் எவருமின்றி கடந்த ஐந்தாண்டுகளில் வரம்புமீறிப் போய்க்கொண்டே இருக்கிறது. இஸ்லாமிய பெயர்கள் வைக்கக் கூடாது, கட்டாயமாகப் பன்றி மாமிசத்தை உண்ண வைத்தல், கம்யூனிசப் பயிற்சி முகாம்களுக்கு கட்டாயமாக அனுப்பப் படுதல் என்று சீன அரசின் கெடுபிடிகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன ஸ்டாலின் காலத்தைய ரஷ்யாவில் forced labour camps குலாக் Gulag என்ற பெயரில் இயங்கிய மாதிரி ஆனால் அதிநவீனமான கண்காணிப்புடன் சீனாவில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.   


ஒரு பிரெஞ்சு பத்திரிகையாளர் சென்ற வருடத் துவக்கத்தில் வெளியிட்ட டாகுமெண்டரி வீடியோ இது. குறைந்தபட்சத் தகவல்களுக்காக இங்கே. உய்கர்கள் துருக்கிய வம்சாவளி முஸ்லிம்கள். எண்பது லட்சம் ஜனத்தொகை என்று சொல்கிறார்கள்  

ஜின்ஜியாங், திபெத் இரண்டையும் Autonomus Region என்றுதான் அழைக்கிறார்கள். அடிமைத்தனத்துக்கு சுயாட்சி அந்தஸ்துள்ள பிரதேசம் என்றழைப்பது சீனர்களுடைய குரூர நகைச்சுவைக்கு ஒரு உதாரணம். 

  
  

    

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை