ஜெய்ஷ் ஏ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிப்பதில் ஐநா பாதுகாப்புசபையில் சீனா நான்காவது முறையாகத் தனது வீட்டோ அதிகாரத்தைப்பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டிருப்பதில் இங்கே காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காண்டிக்கும், காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கும் ஏக மகிழ்ச்சி இப்படி முந்தைய பதிவில் எழுதியிருந்தது நினைவிருக்கிறதா?
பயங்கரவாதத்தைப் பயிற்சி கொடுத்து ஏற்றுமதி செய்கிற ஒரேநாடு பாகிஸ்தான் தான்! ஜெயிஷ் ஏ முகமது போல 48க்கும் மேலான தீவீரவாத இயக்கங்களை பாகிஸ்தானிய ராணுவத்தின் ISI ஆயுதங்கள், பயிற்சி கொடுத்து அண்டைநாடுகளில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்துகிறது. இங்கே இந்தியாவில் பிப்ரவரி 14 அன்று புல்வாமாவில் CRPF வீரர்கள் சென்ற வாகனவரிசை மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தி 41 வீரர்கள் உயிரைக் காவு கொண்டது போலவே, ஈரானிலும் ஆப்கானிஸ்தானிலும் தாக்குதல்களைத் தூண்டி விட்ட செய்திகளும் வந்த பின்னணியில் பாகிஸ்தானை ஆதரிக்க சீனா, சவூதி அரேபியா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகள் எதுவும் முன்வரவில்லை. சென்ற 26 ஆம் தேதி பாலாகோட் ஜெயிஷ் ஏ முகமது பயிற்சிக் கூடத்தின் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல், அதன்தொடர்ச்சியாக பாகிஸ்தான் விமானங்கள் இந்திய ராணுவ நிலைகளின் மீது நடத்திய misadventure அதில் இந்தியவிமானி அபிநந்தன் ஒரு F 16 விமானத்தைச் சுட்டு வீழ்த்தி, பிறகு சிறைபிடிக்கப்பட்டதில் சர்வதேச அழுத்தம் காரணமாக மூன்றே நாட்களில் விடுவிக்கப்பட்டதும் நிகழ்ந்தது. இப்படி ஒருவாரத்துக்கு முன் எழுதியிருந்த பதிவுடன் ஒரு படமும்!
பாகிஸ்தானுடைய பயங்கரவாதத்தாக்குதல்களுக்கு அடிக்கடி ஆளாகிற நாடுகளாக ஆப்கானிஸ்தான், இந்தியா, ஈரான் என்று மூன்று அண்டைநாடுகள் இருக்கிற அதே நேரம்,தாலிபான்களை அடக்க அல்லது அழிக்க பாகிஸ்தான் உதவியை நாடிய அமெரிக்கா கோடிக்கணக்கான டாலர்களையும் நவீன ஆயுதங்களையும் பாகிஸ்தானுக்கு வழங்கியதில் பலன் பூஜ்யம்தான் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகுந்த கசப்புடன் வெளிப்படையாகவே சொன்னார்..
பாகிஸ்தான் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற மாதிரி அமெரிக்கர்களிடம் டாலர்களைக் கறந்துகொண்டு அதேநேரம் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிற நாடாகவும் இருந்ததில் பாகிஸ்தானிய ராணுவம் கொழுத்து வளர்ந்ததே தவிர பாகிஸ்தானிய பொருளாதாரம் அதலபாதாளத்துக்குத் தள்ளப்பட்டது. ஜனங்களுடைய கோபத்தைத் திசை திருப்ப ஒரு ஜனநாயக முகமூடி தேவைப்பட்டதில் சிக்கியவர் .இம்ரான் கான். இதுவரை இருந்த பாகிஸ்தானிய பிரதமர்களிலேயே மிகவும் பலவீனமானவராகவும் இருப்பவர் என்று ஊடகங்கள் சொல்கின்றன.
Against this background, China again blocking UN action against Jaish-e-Mohammed (JeM) founder Masood Azhar was aimed at thwarting international pressure on Pakistan to take credible, irreversible anti-terror actions. That China still protects a terrorist, who reportedly is on his deathbed, undergirds the extent to which it shields Pakistan’s proxy war by terror against India.
It also helps highlight China’s own proxy war against India by employing Pakistan as a surrogate for containment. While reaping an ever-increasing trade surplus with India, China is systematically undermining Indian interests. Yet, since the Wuhan summit, India’s China policy has become more feckless than ever. என்று ப்ரம்ம செலானி நான்கு நாட்களுக்கு முன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்காக ஒரு செய்தி அலசலை எழுதியிருக்கிறார். தொடர்ந்து அவர் சொல்வது தான் மிக முக்கியமானது. சீனாவின் முட்டுக்கட்டையை மீறவும், ஒரு போரைத் தவிர்க்கவும் வேண்டுமானால் இதரநாடுகள் எல்லாம் சேர்ந்து பாகிஸ்தான் மீதான பொருளாதார ரீதியிலான பிடியை இறுக்குவதுதான் ஒரேவழி! அதலபாதாளத்துக்குப் போய் விட்ட பாகிஸ்தான் பொருளாதாரம் காசு காசு உதவி உதவி என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறது. சவூதி அரேபியா அண்மையில் கொடுத்த 750 கோடி டாலர்கள் சுடுமணலில் தெளித்த நீர்போல பழைய கடன்களுக்கு தவணை, வட்டி கட்டுவதற்கே போய்விட்டது. இன்னமும் IMF இடம் 1200 கோடி டாலர்கள் கடன் கேட்டுக் கெஞ்சிக் கொண்டிக்கிறது. கடந்த அறுபது வருடங்களில் இது 22வது முறையாகச் சிக்கலில் இருந்து மீள்வதற்குப் பாகிஸ்தான் கையேந்திக் கொண்டிருக்கிற நிலையை IMF உறுப்புநாடுகள் சரியாகக் கையாண்டால், பாகிஸ்தான் தீவீரவாதவளர்ப்புப் பண்ணையாக இருப்பதைக் கட்டுப்படுத்த முடியும் என்று ப்ரம்ம செலானி சொல்கிறார்.
Pakistan has long employed not just nuclear blackmail but also fiscal blackmail — help us financially or face the perils of the country falling apart. If Pakistan is unwilling to sever its links with state-nurtured terrorists, it is better for the world to let it fail than to continue propping up its military-mullah-jihadist complex with aid and loans — the equivalent of giving more alcohol to an alcoholic, instead of treating the addiction. The treatment now must centre on making Pakistan take verifiable and unalterable anti-terror steps என்று முடித்திருப்பதைக் கொஞ்சம் வாசித்துப்பாருங்களேன்! அக்கம்பக்கம் நடப்பவை எதுவெல்லாம் நம்மை நேரடியாகப் பாதிப்பவை என்று புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்! .