ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு! அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு! டொனால்ட் ட்ரம்ப்புக்கு மட்டும் அந்த நுண்ணிய வேறுபாடெல்லாம் பொருந்தாது போல இருக்கிறது! அமெரிக்க அதிபராக இருப்பதால் யாரையும், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று டொனால்ட் ட்ரம்ப் நினைத்துக் கொண்டிருக்கிற மாதிரித்தான் போகிற இடங்களில் எல்லாம் ஒரண்டையை இழுத்துக் கொண்டு வருகிறார். NATO ராணுவக்கூட்டின் 70வது பிறந்த தினத்துக்காக லண்டனுக்குப் போன டொனால்ட் ட்ரம்ப் அங்கே பிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மேக்ரோனுடன் ஒரண்டையை இழுத்திருக்கிறார். கேலிப்பொருளாகவும் மாறியிருக்கிறார்!
This happens at every NATO summit with Trump. Every G7. Every G20. The US President is mocked by US allies behind his back.
ட்ரம்ப் எங்கேபோனாலும் இதே கதைதான்! முதுகுக்குப் பின்னால் கேலிசெய்யப்படுவது மட்டும்தான் மிச்சம்!
CNN சேனலுக்கும் டொனால்ட் ட்ரம்புக்கும் ஏற்கெனெவே ஏழரை. இப்போது கொண்டாடாமல் வேறு எப்போது கொண்டாடுவது?அதனால் ஜெர்மன் சேனல் இதை எப்படிச் சொல்கிறார்கள் என்று பார்த்து விடலாம். வீடியோ 7 நிமிடம்
In one moment of unscripted exasperation at Nato, Macron showed Trump what the whole world thinks of him now என்று தலைப்பிட்டு கிளெமென்ஸ் மிஷல்லோன் The Independent இல் எழுதியிருக்கிற விமரிசனம் தலைப்பிலேயே விஷயத்தைச் சொல்லி விடுகிறது.
ராபர்ட் டி நிரோ டொனால்ட் ட்ரம்ப்பை போலி என்று சொல்லி முடித்துவிடுவதைப் பார்க்காமல் பதிவை முடிக்க முடியுமா? டொனால்ட் ட்ரம்ப்பாக இருப்பது மெத்தக் கடினம்தான்! மறுக்க முடியாது! டொனால்ட் ட்ரம்ப்பை சகித்துக் கொள்ளமுடிவது முடியவே முடியாத அளவுக்குக் கடினம் தான்!
ராஜீய உறவுகளில் ஒரு நாசூக்கு, கண்ணியமான வார்த்தைகள், ஏற்றுக்கொள்ள முடிகிற அளவுக்குக் கண்ணியமான வார்த்தைகள் அவசியமே இல்லை என்ற புதுவிதமான விஷயத்துக்கு டொனால்ட் ட்ரம்ப் முன்னோடியாக இருக்கிறார் என்பது அமெரிக்காவின் பரிதாபம்!
மீண்டும் சந்திப்போம்.