ஒரு நாட்டின் வெளியுறவுக்கொள்கை என்னென்ன அடிப்படைகளில் உருவாக்கப்படுகிறது? இந்த விஷயத்தை முந்தையபதிவுகளில் கொஞ்சம் பார்த்து இருக்கிறோம். இதையே கொஞ்சம் அனுபவமுள்ள ஒருவர் சொன்னால் எப்படியிருக்கும்?
இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில், நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் Dr. S. ஜெய் சங்கர், புது டில்லியில் 4வது ராம்நாத் கோயங்கா உரை என்று, இந்த 48 நிமிட வீடியோவில், ஐந்து கட்டங்களாக உருமாற்றம் ஆன இந்திய வெளியுறவுக் கொள்கை பற்றிக் கொஞ்சம் விரிவாகவே பேசுகிறார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும் JNU விலும் பணியாற்றிய பிறகு தற்போது சிங்கப்பூரில் Institute of South Asian Studies, National University of Singapore இல் இயக்குனராக இருக்கும் C ராஜ மோகனுடன், பாகிஸ்தான், ஆர்டிகிள் 370. RCEPயில் சேருவதில்லை என்ற முடிவு இப்படி வெளியுறவு விவகாரங்களில் நடப்பு நிலவுரங்களைகுறித்தான கேள்விகளுக்குப் பதிலளித்து உரையாடுகிற இந்த வீடியோ 43 நிமிடம்.
கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் வெளியுறவு விவகாரங்கள் புரிந்துகொள்ளக் கடினமானதல்ல. என்று நான் இந்தப்பக்கங்களில் சொல்லிவருவது ஏனென்பது 90 நிமிடங்கள் செலவழித்து இந்த இரு வீடியோக்களைப் பார்த்தாலே புரியும்.
மீண்டும் சந்திப்போம்.